/

DIN

நேரா யோசி - சுதாகர் கஸ்தூரி; பக். 136; ரூ.160;  சுவாசம் பதிப்பகம், சென்னை- 127; 81480 66645.

பிரச்னை என்பது பிரச்னையில் இல்லை.  அதனைப் பார்க்கும் விதத்தில்தான் உள்ளது. இந்த உலகம் எப்படி இருக்கிறதோ அப்படி நாம் பார்ப்பதில்லை. அது 
எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறோமோ அப்படித்தான் பார்க்கிறோம். இதற்குக் காரணம் நமக்கு இருக்கும் முன் முடிவுகள். நாம் நம்மையும் உலகையும் பார்க்கும் விதத்தில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி, நம்மைத் திருத்திக் கொள்ள உதவுவதே இந்த நூலின் நோக்கம்.

அறிவாளியாக இருந்தாலும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஒருவரது சிந்திக்கும் திறன் பாதித்து விடும். உணர்ச்சிவசப்படும்போது  உடல், மனதில் உடனடியாக ஏற்படும் அனிச்சை விளைவுக்கும் கொஞ்சம் கால தாமதமாக ஏற்படும் தர்க்கப்பூர்வமான எதிர்வினைக்கும் உள்ள வேறுபாட்டை நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார். 'உணர்ச்சிவசப்படும்போது கொஞ்சம் பொறுத்து எதிர்வினை ஆற்று'  என்பது காலங்காலமாகச் சொல்லப்படும் 

தேய்வழக்குதான். எனினும் அதற்குப் பின்னால் இருக்கும் மூளை நரம்பியல் அறிவியல் தகவல்கள் இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கும் விதம் 
முக்கியமானது.

சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான தகவல்கள், போலிச் செய்திகள் நமது சிந்தனை முறையை எப்படி மாற்றுகின்றன.  இவை தவறான முன் முடிவுகளை எடுக்க வைக்கும். இவற்றால் பிறர் மேல் வெறுப்பு, பொறாமை, கோபம் கலந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது சமூக உறவுகள் பாதிப்படையும் என்ற கருத்து மிகஅழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சரளமான மொழி நடையில் நல்ல தமிழ் கலைச் சொற்கள் விரவி வந்திருக்கிறது 'நேரா யோசி'. இந்த நூல் மாணவர்கள், இளம் தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.