சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

காக்கைச் சிறகினிலே - பறவைகளின் வண்ணமயமான உலகம்- வ.கோகுலா; பக். 200; ரூ.230; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; ✆ 044 - 4200 9603.

பறவைகள் தொடர்பான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் வெளிவந்துள்ள பல்வேறு நூல்களில் மாறுபட்டது இந்த நூல்.   அவற்றின் அனைத்து விதமான அம்சங்களையும், அதன் தோற்றுவாய் குறித்தும் அலசுகிறது.  

அண்டம் தோன்றிய கதையிலிருந்து ஆதி  உயிரினங்கள் உருவெடுத்தது எப்படி,  பறவை இனங்கள் தோன்றியது எப்படி என நூலாசிரியர் பல தகவல்களை தந்திருக்கிறார். அதுமட்டுமல்லாது புதை படிம ஆதாரங்கள், அறிவியலாளர்களின் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் 'டைனோசர்'  என்ற உயிரினத்திலிருந்துதான் பறவைகள் பரிணாமம்  அடையத் தொடங்கியதாகவும் அறுதியிட்டு கூறுகிறார்.

பறவைகள் எவ்வாறு பறக்கின்றன,  இறகுகள் தோன்றியது எப்படி  உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடையளித்திருக்கிறது இந்த நூல். 

அண்ணாந்து பார்க்கும்போது அழகாக மட்டுமே தெரியும் ஒரு சிற்றுயிரினத்தின் உடலுக்குள் எத்தனை சிக்கலான கட்டமைப்பு இருக்கிறது என்பதையும் நூலாசிரியர் விளக்கியுள்ளார். பறவைகளின் இடம்பெயர்தல் குறித்த கட்டுரை புதிய தகவல்களை அளிக்கின்றன. 

இனப்பெருக்கம், முட்டையிட்டு அடைகாத்தல், அதற்கான சூழலைக் கட்டமைத்தல் என பறவைகள் மேற்கொள்ளும் நுட்பமான விஷயங்களும் விவரிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் பறவைகளின் வாழ்வியலோடு பயணிப்பதற்கான வாய்ப்பை  அளிக்கிறது இந்நூல். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.