சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

மோடி 20 நனவாகும் கனவுகள் - தொகுப்பு ப்ளூகிராஃப்ட் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் (தமிழில்: மீரா ரவிசங்கர்) ; பக்.440; ரூ. 895; அல்லயன்ஸ் கம்பெனி,  சென்னை - 4; ✆ 044-2464 1314.

எளிய பின்னணியிலிருந்து வந்த நரேந்திர மோடி  ஆளுமைமிக்க தலைவராக ஒவ்வொரு கருத்துக் கணிப்பிலும் அறியப்படுபவர்.  முதல்வராக 12.5 ஆண்டுகளும், பிரதமராக 9 ஆண்டுகளும் இடைவெளியின்றி  20 ஆண்டுகால பயணத்தின் சிந்தனைகளை, செயல்களை வெளிக்கொணர முயன்றிருக்கிறது இந்த நூல்.

சமூக தாக்கம், அரசியல் தாக்கம், பொருளாதாரக் கொள்கை, புதிய மாற்றங்கள், வெளியுறவுக் கொள்கை என 5  பகுதிகளைக் கொண்டுள்ளது. பி.வி. சிந்துவில் தொடங்கி, அமித் ஷா, பொருளாதார நிபுணர் அரவிந்த் பனகரியா, தொழிலதிபர் சுதா மூர்த்தி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட 21 சமூகப் பெரியோர், அதிகாரிகளின் அனுபவங்களைத் தொகுத்திருக்கிறார்கள். இவை மோடி எவ்வாறு பணியாற்றுகிறார் என்கிற புரிதலை ஏற்படுத்த உதவுகிறது.

இந்தியாவின் பாரம்பரியத்தை மீட்டுருவாக்கம் செய்தது, பழம்பெருமையை விஜயம் செய்த அதிமுக்கிய வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு எடுத்துரைத்தது, அனைவருக்குமான வளர்ச்சி என்கிற கொள்கை, திட்டங்கள் என மோடியின் செயல்கள் அவர் புகழை வானளவு உயர்த்தியது என்பதை நூலில் உள்ள அத்தியாயங்கள் எடுத்தியம்புகின்றன. 

ஒவ்வொரு குடிமகனும் தன்னை எளிதில் தொடர்பு கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும் என்கிற  மோடியின் உறுதியான சிந்தனையே அவரது உயர்வுக்குக் காரணம் என்பதை நூல் சான்றுகளுடன் விளக்குவது சிறப்பு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.