அடிப்படை மாற்றங்களை நோக்கி - க.பழனித்துரை; பக். 144; ரூ.200; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி.) லிட்., சென்னை-50; ✆ 044- 2625 1968.
அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியராகப் பணிபுரிந்த நூலாசிரியர் உள்ளாட்சியை வலுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு குழுக்களில் செயல்பட்டவர்.
அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் வந்திருக்கிறது. 'கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது' என்ற மகாத்மா காந்தியின் கனவை நனவாக்குவதன் எண்ணத்தை மேம்படுத்துகிற வகையில், 18 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
கிராம மேம்பாடு, ஊராட்சிகளை மேம்படுத்துதல், புதிய சூழல் உருவாக்கம், புதிய அரசியல் உருவாக்கம், ஏழைகள், விளிம்பு நிலையில் உள்ள மக்கள் மக்களாட்சியில் ஏற்றம் பெறுதல், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான தலைமைத்துவம், , மத்திய- மாநில அரசுத் திட்டங்கள், கல்வி- மருத்துவ மேம்பாடு, மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றுதல் என்று பல விவரங்களை மக்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் இந்த நூலின் வாயிலாக அறியலாம்.
கிராம மக்கள் அரசின் வாயிலாக, எவ்வாறு தங்களை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதையும், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மக்களுக்கு எவ்வாறு பணியாற்றலாம் என்பதையும் அருமையாக விளக்கியுள்ளார் நூலாசிரியர்.
கிராமப்புற மக்களுக்கு கல்வியை மேம்படுத்துவதன் அவசியத்தை அருமையாக விளக்கியுள்ளார். சமூகச் செயல்பாட்டாளர்களின் அவசியத்தை விளக்கியுள்ள நூலாசிரியர், ஏற்கெனவே மக்களாட்சி மேம்புற பாடுபட்டவர்களின் வரலாற்றையும் விளக்கங்களையும் எடுத்துரைத்துள்ளார்.
நாட்டின் நலனில் அக்கறை கொண்டோர் வாசித்து அறிந்து, பிறருக்கு விளக்கமளிக்க எண்ணற்ற தகவல்கள் நிறைந்த நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
உறியடி விஜயகுமார் நடிக்கும் அறிவு!

இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தெற்கு உலகிற்கு நலன்: சீன அரசு விருப்பம்
திட்டமிட்டு தாக்குகிறார்கள்: பிரியங்கா மோகன் வேதனை

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

