தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

DIN

ஹேமாலயம், தொகுப்பு - பால அமுதா, பக்.210, ரூ.200, பர்ஸ்ட் ஓல்டு கம்யூனிட்டி, 95, போயஸ் சாலை, சுப்பராயன் நகர், தேனாம்பேட்டை, சென்னை-18.

இந்தியாவிலேயே பாக்கெட்டில் அடைக்கப்பட்ட முதல் 'ஷாம்பு'  பிறந்த கதை- அதன் வெற்றியே நூலின் கருவான டாக்டர் ஹேமா சின்னிகிருஷ்ணனின் அனுபவப் பகிர்வாகத் தொடங்கும் 'மின்னலாய் உதித்த சாதனைப் பொறி', 'அன்புத்தாய் மறைந்தார்' என்பது வரையில் நிதர்சனமான சம்பவங்கள் நூலெங்கும் 26 தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன.

கடலூரைச் சேர்ந்த ஹேமா சின்னிகிருஷ்ணன் தனது வாழ்க்கைச் சம்பவங்களை அவரே விவரிப்பது போல கட்டுரைகளை நூலாக்கியுள்ளார் ஆசிரியர்.

கனவில் யானை துரத்தியதையும், அதற்காக ஹேமாசின்னிகிருஷ்ணன் காஞ்சிப் பெரியவரைச் சந்தித்து பேசித் தீர்வு கண்டதும்  மெய்சிலிர்க்கும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளது.  'என் கணவர் மனித கம்ப்யூட்டர்' எனும் கட்டுரையில் ஹேமாவின் திருமணம் குறித்து சிறுகதைபோல சுவாரஸ்யமாக சம்பவங்களை விவரித்திருப்பதும்,  தியாகிகளை நினைவூட்டியிருப்பதும் படிப்போரின் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது.

'சாதனையோடு வந்த வேதனைகள்' கட்டுரையில் ஹேமாவின் கணவர் ஈடுபட்ட துறைகள், கண்டுபிடிப்புகள், பொம்மைகளை ஏற்றுமதி செய்தது என தற்காலத் தொழில் முனைவோருக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்வுகள். 

சாதனை படைத்த பெண்மணியின் வாழ்க்கைப் போராட்டங்கள், வெற்றிப் பயணம்,   குழந்தை வளர்ப்பு, நிர்வாகத் திறன் என அனைத்து வாழ்க்கை நிலைகளையும் அனுபவரீதியாக படிப்போர் உத்வேகம் பெறும் வகையில் சம்பவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.  முற்றிலும் மாறுபட்ட  வழிகாட்டி நூல்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.