தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பு மலர்

News image
Updated On :7 ஆகஸ்ட் 2023, 10:50 am

DIN

11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பு மலர் - சுகவன முருகன்; பக்.390; ரூ.500; உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இந்தியக் கிளை, சென்னை-17; ✆ 044- 2834 0488.

மலேசியா, கோலாலம்பூரில் ஜூலை 21,22,23-ஆம் தேதிகளில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டையொட்டி, வெளியிடப்பட்ட சிறப்பு மலர்.  பண்பாடு, கலை - வரலாறு, இசை, இலக்கியம், சிறார் இலக்கியம், பதிப்பியல், அறிவியியல் - கணினி அறிவியல், தொல்லியல் என்ற எட்டு தலைப்புகளில் 50 கட்டுரைகள் மலரில் இடம்பெற்றுள்ளன.  ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு பெற்றுள்ளது. 

'பூதகிகளும் பேய் மகளிரும்' எனும் கட்டுரையில்,  ஏராளதகவல்களுடன் காரைக்கால் அம்மையின் பல்வேறு தோற்றங்களை ஒருசேர படங்களாகவும் காட்டியுள்ளனர் மங்கைராகவனும் வீரராகவனும்!

'ஆபிரகாம் பண்டிதர் என்னும் புகைப்படக் கலைஞர்' கட்டுரையில்  பண்டிதரின் இன்னொரு முகத்தை சிறப்பாகத் துலங்க வைக்கிறார் ஆர்.ஆர்.சீனிவாசன்.

'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி' என்ற சிறப்புடைய தமிழர்கள், தமிழ்க் கலாசாரம், வரலாறு என்று பலதரப்பட்ட விஷயங்களை ஒருசேர இந்த ஓரு புத்தகத்தில் படித்து விடலாம். 

தமிழின் சிறப்பை பிற மொழியாளர்களும் அறியும் வண்ணம் தொல்லியல் துறை சார்ந்த  5 கட்டுரைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது சிறப்பு. 

இதிகாசங்கள், இலக்கியங்கள் குறித்த விளக்கங்களை அட்டவணைப்படுத்தியுள்ளதும்,  கட்டுரைக்குரிய பொருத்தமான படங்களைப் பயன்படுத்தியுள்ளதும் சிறப்பு.

உலகத் தமிழர்கள் படித்தறிய வேண்டிய தகவல்கள் அடங்கிய பெட்டகம் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.