ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

DIN

தென்னிந்தியக் கிராம தெய்வங்கள் - ஹென்றி ஒயிட்ஹெட்  (தமிழில்: வானதி); பக்.160;  ரூ. 190;  கிழக்கு பதிப்பகம், சென்னை-14 ; ✆ 044- 4200 9603.

மதப் பரப்புரைக்காக இந்தியா வந்த பாதிரியார்களுக்கு இந்த நாட்டையும்  இந்து வழிபாட்டு முறைகளையும் புரிந்துகொள்வது தேவையாக இருந்தது. அதற்காக மேற்கத்திய ஆய்வு நெறிகளின் அடிப்படையில் கள ஆய்வுகளை மேற்கொண்டவர்களில் ஒருவர்தான் பிரிட்டனிலிருந்து வந்த ஹென்றி ஒயிட்ஹெட்.

ஆங்கிலிகன் திருச்சபையின் அருட்தந்தையாக 23 ஆண்டுகள் பணியாற்றிய இவர்,  ஆங்கிலேய ஆட்சியிலிருந்த மதராஸ் மாகாணத்தின் பல பகுதிகளில்  ஆய்வு செய்ததன் விளைவாக, 'தி வில்லேஜ் காட்ஸ் ஆஃப் சவுத் இந்தியா' என்ற ஆங்கில நூலை 1921-இல் எழுதி வெளியிட்டார். அந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே இந்நூல்.

கிராம தெய்வங்களின் உருவாக்கம், வழிபாட்டு மரபுகள், சமய நம்பிக்கைகள், பலிச் சடங்குகள், நேர்த்திக்கடன்கள், திருவிழாக்கள், பாரம்பரியக் கலைகள் ஆகியவற்றை ஒரு புறப்பார்வையாளராக நோக்கி எழுதப்பட்டுள்ளது இந்த நூல்.

மதுரைவீரன், அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பசாமி, மாரியம்மன், கோவை கோனியம்மன், சவடம்மா, கன்னிகா பரமேஸ்வரி போன்ற தெய்வங்கள் குறித்த தகவல்கள் கவனிக்கத்தக்கன.  சமூகக்குழுக்களின் குலதெய்வ வழிபாடு, பெண் தெய்வங்களே குலதெய்வமாக இருப்பது குறித்தும் வியப்புடன் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். ஓர் அந்நியரின் பார்வையில் விரியும் இந்த இன வரைவியல் நூல், சமூகவியல் ஆய்வாளர்களுக்கான ஆவணம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.