ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

DIN

கதவுகளில் கலந்த கலாச்சாரம்; கே.பத்மலெக்ஷ்மி, பக். 176; ரூ. 180; பேசும் புதிய சக்தி; திருவாரூர்-610001; 94897 73671.

'பேசும் புதிய சக்தி' இதழில் தொடராக வெளியான கட்டுரைகளின் தொகுப்பு.

நாடெங்கிலும் உள்ள கோயில்கள்,  அரண்மனைகள், வீடுகளின் கதவுகளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம்,  கதவுகளில் இருந்த கலாசாரப் பின்னணி குறித்து வித்தியாசமான முறையில் விவரித்துள்ளார் நூலாசிரியர்.

'ஆதிகாலத்தில் மனிதன் வனவிலங்குகளிலிருந்தும், இயற்கைச் சீற்றங்களிலிருந்தும்  தன்னைக் காக்கும் கவசமாக வீடுகளையும், கதவுகளையும் உருவாக்கினான். காலப் போக்கில் அவை சொர்க்கத்தின் வாயிலாக,  தெய்வமாக, வெளிச்சத்தின் பிறப்பிடமாகக்  கருதப்பட்டன.   நாகரிக வளர்ச்சி ஏற்பட்டபோது, கதவுகளில் பல வடிவங்கள் வந்தன. தயாரிக்கும் பொருள்கள் மாறுபட்டன.   கதவுகள் என்பவை ஒவ்வொரு பகுதியின் இனத்தின், மனிதனின் உணர்வுகளை, சமூக, கலாசாரத்தை பிரதிபலிக்கும் கண்ணாடிகள்' என்கிறார் நூலாசிரியர்.

கோட்டைகள், அரண்மனைகளில் எதிராளிகள் உள்நுழையாதபடி கண்காணிக்கும் கதவுகள், அரசியின் தனிமையை பாதுகாக்கும் கதவுகள்.. என்று வகை, வகையாகப் பிரித்து கதவுகள் அமைக்கப்பட்டதும் கூறப்பட்டுள்ளது.

காரைக்குடியில் பாரம்பரியம் மிக்க செட்டிநாட்டு வீடுகளின் விவரங்களையும் விளக்கியுள்ளார். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கதவுகளின் வரலாறு முதல் இன்றைய வரலாறு வரை அருமையாக அலசுகிறது இந்த நூல். கட்டுரைகளுக்குரிய புகைப்படங்களை இணைத்திருப்பது சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.