சித்தாந்த சிகாமணி - நல்லாற்றூர் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்; பக். 882; ரூ. 600; மயிலம் பொம்மபுர ஆதீனம், மயிலம் - 604 304; ✆ 0413-655188.
தமிழ் இலக்கியம், இலக்கணம், தத்துவம், சமயம் ஆகிய துறைகளில் கற்றுத் துறை போகியவர் நல்லாற்றூர் சிவப்பிரகாச சுவாமிகள். 'கற்பனைக் களஞ்சியம்' என்று போற்றப்படும் இவர், வடமொழியில் ரேணுகாசாரிய யோகி என்பாரால் இயற்றப்பட்ட 'சித்தாந்த சிகாமணி' நூலை அதே பெயரில் தமிழில் வழங்கியுள்ளார்.
இந்த நூல் வீரசைவம் குறித்து தத்துவ நோக்கில் விரிவாக விளக்குவதாக அமைந்துள்ளது. குருவணக்கம், லிங்க வழிபாடு, உருத்திராக்கம், திருநீறு, பிரசாதம், அடியவர் பெருமை முதலியவற்றைப் பற்றி ஐயமறத் தெளிவுபடுத்துகிறது.
'தெளிவு குருவின் திருவுரு சிந்தித்தல்தானே' எனும் திருமூலர் வாக்கின்படி, குருவே பாசமாகிய ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களை நீக்க வல்லவர் என்பதைப் பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளார். அங்கத்தலம், இலிங்கத்தலம், ஐக்கியத்தலம் முதலான பொருள்கள், அங்கலிங்க ஐக்கிய விவரங்கள் கூறும் வகையில் காப்பு, பாயிரம் உள்ளிட்ட தலைப்புகளில் எண்ணூற்று எண்பது செய்யுள்களில் வீரசைவ தத்துவ நுண்பொருள்கள் கூறப்பட்டுள்ளன.
ஒவ்வொரு செய்யுளுக்கும் பதவுரையும், கருத்துரையும், விரிவுரையும் வழங்கப்பட்டிருப்பதோடு, அவை பிற உரைகளுடன் ஒப்பிடப்பட்டும் உள்ளன. மேலும், பெரும்பாலான செய்யுள்களுக்கு தொல்காப்பியம், நன்னூல், திருக்குறள், தேவாரம் உள்ளிட்ட பிற நூல்களிலிருந்து மேற்கோள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, 'வேதியன் புலைக்கீழ் என வேறிலை ஓதரும் சிவபத்தி உடையனே' எனும் செய்யுளுக்கான விரிவுரையில், அப்பரின் 'ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே' எனும் தேவாரப் பாடல் ஒப்பிடப்பட்டுள்ளது. வீரசைவ செந்நெறியை விளக்கும் நுட்பமான நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!
வெல்லும் தமிழ்ப் பெண்களே... உங்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின்
மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசு
அசத்தும் கென்-ன் யூத் டிரைலர்!
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

