ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

DIN

தாமஸ் ஆல்வா எடிசன் - எஸ்.எல்.வி.மூர்த்தி; பக்.280; ரூ.320; சுவாசம் பப்ளிகேஷன்ஸ், 52/2, பி.எஸ்.மஹால் அருகில், பொன்மார், சென்னை - 600127.

தனது அறிவியல் கண்டுபிடிப்புகளால் உலகை மாற்றியமைத்ததுடன், மனித வாழ்க்கை முறையையும் புரட்டிப்போட்ட தாமஸ் ஆல்வா எடிசனின்  சுயசரிதம் போல விரிவாக இந்நூல் பதிவு செய்துள்ளது.

தெளிவாகச் சிந்திக்க வேண்டுமென்றால் தனிமையில் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்த வேண்டும் என்பதை தனது வாழ்க்கையிலும், அறிவியல்  கண்டுபிடிப்பு முயற்சிகளிலும் அவர் கடைப்பிடித்துள்ளார்.

குடும்பச் சூழல், வறுமை, பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டது, உடல்குறைபாடுகள், வியாபாரத் தந்திரம் இல்லாமை என எடிசனிடம் எத்தனையோ குறைகள் இருப்பினும் 
அவருடைய விடாமுயற்சியும், சுயம்புவாகச் சிந்திக்கும் திறனுமே அவருக்கு பெரும்புகழையும் மனித குலத்துக்கு அரிய கண்டுபிடிப்புகளையும் அளித்தன.

அவரது கண்டுபிடிப்புகளில் அதிக நேரம், பரிசோதனை முயற்சிகளை மின்விளக்கை கண்டுபிடிக்கவே செலவிட்டுள்ளார். மின்விளக்கில் பயன்படுத்தப்படும் இழையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஜேம்ஸ் ரிக்கால்ட்டனை திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சென்னை உள்பட உலகம் முழுவதும் அனுப்பி வைத்தார் என்ற தகவல் வியப்படைய வைக்கிறது.

கார்ப்பரேட்டுகளின் வெற்றிக்காக நெறிகளைக் கைவிட்டு எடிசன் செய்த அறமற்ற செயல்களையும் இந்நூல் பதிவு செய்துள்ளது. வாழ்க்கையில் ஒருமணி நேரம்கூட எடிசனின் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அதனால்தான் அவர் சாமானியர்களின் விஞ்ஞானி என்று இன்றும் நினைவுகூரப்படுகிறார். வாசிக்க வேண்டிய நூல் இது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.