அயோத்தி, 500 வருட போராட்ட வரலாறு - சக்திவேல் ராஜ்குமார்; பக்.158; ரூ.150; அல்லயன்ஸ் கம்பெனி, மயிலாப்பூர், சென்னை - 600 004. ✆ 044-24641314.
உலகிலேயே நீண்ட நாள் நடந்த அயோத்தி வழக்கு குறித்தும், ராம ஜென்ம பூமிவழக்கின் 300 வருட பின்னணி குறித்தும் இந்நூல் விரிவாக அலசுகிறது.
ராமர் ஆலயத்தை மையப்படுத்திய அபூர்வ சம்பவங்கள், போராட்டங்கள், அரசியல் நிகழ்வுகள், அயோத்தி வழக்கின் தீர்ப்பு, சட்ட விளக்கங்கள் உள்ளிட்டவற்றை மிகவும் எளிமைப்படுத்தி அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் கால வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது இந்நூலின் சிறப்பு.
ராம ஜென்ம பூமியில் பிரம்மாண்டமான கோயிலை கட்டியவர் விக்கிரமாதித்த மகாராஜா. அவரது காலத்துக்குப் பிறகு பல்வேறு அரசர்களால் செம்மைப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, மொகலாயர் ஆட்சியில் அந்தக் கோயில் எவ்வாறு படிப்படியாக மசூதியாக மாற்றப்பட்டது என்பதை பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து இந்நூல் தெளிவுபடுத்துகிறது.
1528-ஆம் ஆண்டிலிருந்து தற்போது அயோத்தில் கட்டப்பட்டுவரும் ராமர் கோயில் வரையிலான நிகழ்வுகள், ராம ஜென்ம பூமியை மீட்க உறுதுணையாக நின்ற இந்து சமய பெரியோர்கள், எதிர்தரப்பினர் ஆகியோர் குறித்து இந்நூல் தெரிவிக்கும் கருத்துகள் நடுநிலையாக உள்ளன.
மொகலாயர்கள், ஆங்கிலேயர்கள், போலி மதச்சார்பின்மை, ஆட்சியாளர்களின் அலட்சியம் ஆகியவற்றால் இந்து மதமும், கோயில்களும் எவ்வாறெல்லாம் சிதைக்கப்பட்டன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 14 நதிகள் தற்போதும் அதே பெயரில், அதே இடத்தில் உள்ளன என்பதை வைத்து ராமாயணம் நிஜமாகவே நிகழ்ந்த சரித்திரம் என்ற கோணம் வியப்பளிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!

புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி தொடர்!

ஐபிஎல் 2026ல் சிறந்த எகானமி: முதலிடத்தில் சிஎஸ்கே வீரர் அகீல் ஹொசைன்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

