பரிணாமத்தின் ஊடாக வாழ்க்கையின் விளக்கம் - புரோசாந்தா சக்கரவர்த்தி (தமிழில்-பிஎஸ்வி குமாரசாமி); பக்.-236; ரூ.399; மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், நொய்டா, உத்தரப் பிரதேசம்.
உயிரினங்களும், அதனூடே மனித இனமும் பரிணமித்த கதைகளை கூறும் நூல்களில் இந்நூல் பெரிதும் வேறுபட்டு பல அரிய ஆய்வுத் தகவல்களை தருகிறது. அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றிய நூலாசிரியர் முன்வைக்கும் கருத்துகள் அறிவியல்பூர்வமானதாகவும், அறுதித்தன்மை கொண்டதாகவும் உள்ளன.
குரங்கிலிருந்து மனிதன் உருவானதை விளக்கும் பரிணாம வளர்ச்சி குறித்த ஓவியமே அடிப்படையில் தவறு எனக் கூறும் நூலாசிரியர், உண்மையில் நாம் யார் என்பதை எளிமையாக உணர்த்துகிறார்.
குரங்குடன் சேர்ந்து நாமும் வளர்ச்சி அடைந்தோமே தவிர, அதிலிருந்து அப்படியே நாம் உருமாற்றம் அடையவில்லை என்பது இவரது கருத்தாக உள்ளது.
ஒரு பாக்டீரியா 70 ஆயிரம் தலைமுறைகள் கடந்து பரிணாமம் அடைந்தபோதும், அது வீரியமடைந்ததே அன்றி மற்றொரு உயிரினமாக உருவெடுக்கவில்லை என்ற உண்மை ஆராய்ச்சி தகவல் மூலம் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. அதுபோலவே கரோனா போன்ற வைரஸின் உருமாற்றமும் விறுவிறுப்பான நடையில் விளக்கப்பட்டிருக்கிறது.
எலும்பு மீனின் முதுகெலும்புக்கும், மனிதனின் முதுகெலும்புக்குமான தொடர்பு குறித்த விவரங்களும், பரிணாமத்தின்படி நிலை வளர்ச்சியை கேள்வி பதிலாக அளித்திருப்பதும் மீள்வாசிப்புக்கு தகுதியானவை.
டார்வினின் கதை சித்திரக் கதையாக சில பக்கங்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பது புதிய முயற்சி. விலங்குகளுக்கு இடையே தன்பாலின ஈர்ப்பு இருப்பது பொதுவான ஒன்று என்பதும், அதன் வாயிலாக பரிணமித்த மனித இனத்திலும் சிலருக்கு அத்தகைய பண்புகள் இருப்பது ஒத்தியல்பு என்பதும் அறியப்படாத தகவல்கள்.
அனைத்துத் தரப்பினரின் அறிவுத் தேடலுக்கும் விடை கொடுக்கிறது இந்நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சவரனுக்கு ரூ. 800 உயர்ந்த தங்கம்: வெள்ளி?

சல்மான் கான் - நயன்தாரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னையில் அதிநவீன வழிகாட்டி பலகைகள்! வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்!!

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 14,508 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

