திராவிட இன அடையாளமும் வெகுமக்களிய அரசியலும் - நரேந்திர சுப்பிரமணியன் (தமிழில் - க. திருநாவுக்கரசு); பக். 616; ரூ. 750; காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் - 629001; ✆ 04652 - 278525.
இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கும் திராவிட அரசியல் பற்றி இயக்கம் சாராத, கல்விப் புலத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவான முதல் ஆய்வு நூல். கனடாவின் மெக்ஹில் பல்கலை. அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியரான நூலாசிரியர் இந்த ஆய்வுக்காகப் பெரும் உழைப்பைச் செலுத்தியிருப்பது நூலில் சிறப்பாக வெளிப்படுகிறது.
மதமறுப்பு அரசியல் - காலனியாட்சியின் பிற்பகுதியில் பிராமணல்லாதார் இயக்கமும் தமிழ்த் தேசியமும், நேருவிய காலகட்டத்தில் திமுக பெற்ற வெகுமக்களிய ஏற்றம், திமுக, அதிமுக ஆகியவற்றின் செல்வாக்கான / ஆட்சிக் காலத்தின் செயற்பாடுகள் பற்றியும் தனித்தனி இயல்களில் விரிவாக அலசப்படுகின்றன.
சாதாரண மக்களுக்கும் உயர் குழாமினருக்கும் இடையிலான வித்தியாசங்கள் எந்த அளவுக்கு அணி திரட்டல் உத்திகள், ஆதரவாளர்களின் மனநிலைகள், நிறுவன வடிவங்கள், கொள்கைச் சார்புகள் மீது தாக்கம் கொண்டுள்ளன என்பதன் அடிப்படையில் வெகுமக்களியத்தை ஆசிரியர் அணுகுகிறார்.
திராவிடக் கட்சிகளின் சமூகச் சித்திரிப்புகள் மொழி, ஜாதி, மதம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டன; என்றாலும் அவற்றைக் கடந்ததாகவும் இருந்தன. தங்கள் ஆதரவு சக்திகளைக் கணக்கில்கொண்டு, திராவிடக் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் இலக்குகளையும் உத்திகளையும் மாற்றிக் கொள்கிறார்கள் என்பதும் தலைமையின் நெகிழ்வுத் தன்மையும் அலசப்படுகிறது.
நூலில் திராவிட இயக்கத்தின் நிறை குறைகள் இரண்டுமே மிகச் சிறப்பாக அலசப்படுகின்றன. ஆய்வு நோக்கில் திராவிட இயக்கங்களின் அரசியலைப் புரிந்துகொள்ள அருமையான - தரவுகளால் நிரம்பிவழிகிற நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடக்கம்!
பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் சமுதாயத்தைக் கட்டமைப்போம்: குடியரசுத் தலைவர் மகளிர் நாள் வாழ்த்து!
ஈரான் பள்ளி மீது தாக்குதலில் 165 சிறுமிகள் கொல்லப்பட்டதற்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை: டிரம்ப்

பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

