தொடக்கக் காலத் தமிழ் நூல்கள் (ஆய்வு நூல்) - முனைவர் பெ.சுப்பிரமணியன்; பக்.232; ரூ.260; காவ்யா, சென்னை-24; ✆ 044- 2372 6882.
ஆங்கிலம் வழியாகவே இந்திய மொழிகளில் நாவல்கள் பிறந்தன என்கிறார் நூலாசிரியர். மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் (1878), பி.ஆர்.ராஜம் அய்யரின் கமலாம்பாள் சரித்திரம் (1895), அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் (1898) ஆகிய தொடக்கக் கால நாவல்களின் தலைப்புகள் காப்பியங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன என்கிறார் நூலாசிரியர்.
'பிரதாப முதலியார் சரித்திரம்', ராஜாராணி கதைகள் பழங்கதைகள், நாட்டுப்புறக் கதைகள், வரலாற்றுக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு கதை பின்னப்பட்டுள்ளது. மொழி நடை மணிப்பிரவாளம்.
'கமலாம்பாள் சரித்திரம்'- தத்துவம் சார்ந்த நாவல். 26 வயது வரை மட்டுமே வாழ்ந்த ராஜம் அய்யரோ விவேகானந்தரால் தொடங்கப் பெற்ற 'விழித்துகொண்ட இந்தியா' என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக அமர்த்தப்பட்டார். அ.மாதவையா - நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரைகள் எனப் பன்முக ஆளுமை கொண்டவர்.
பத்மாவதி சரித்திரம் எழுதிய பிறகு முத்து மீனாட்சி, விஜய மார்த்தாண்டபுரம் நாவல்களும் எழுதி பாராட்டும் பெற்றார். ஆங்கிலத்திலும் நாவல்கள் எழுதினார். இதில் குறிப்பிடத்தகுந்தது 'கிளாரிந்தா'. நடப்பியல் சார்ந்த நாவல் படைப்பதில் இவரே முன்னோடி.
அ.மாதவையாவின் பத்மாவதி, கல்யாணி, சாவித்ரி, ராஜம் அய்யரின் கமலாம்பாள், முத்துசாமி அய்யர், வேதநாயகம் பிள்ளையின் கதாபாத்திரங்கள் ஞானம்பாள், சுந்தரத்தண்ணி ஆகியோர் இன்றளவும் வாசகர் மனதில் தங்கிய பாத்திரங்களே என்கிறார் நூலாசிரியர். கதை சொல்லல், பாத்திரங்கள், பின்புலம், வாய்மொழி மரபு, சமூகத் தாக்கம் பற்றி அறிய ஆய்வு மாணவர்களுக்கு அடிப்படை ஆதார நூல்களில் இதுவும் ஒன்றாக அமையத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சவரனுக்கு ரூ. 800 உயர்ந்த தங்கம்: வெள்ளி?

சல்மான் கான் - நயன்தாரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னையில் அதிநவீன வழிகாட்டி பலகைகள்! வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்!!

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 14,508 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

