சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

DIN

கஸ்தூர்பா    vs     காந்தி - பரகூர் ராமச்சந்திரப்பா. தமிழாக்கம்: மதுமிதா & மலர்விழி; ஹெர் ஸ்டோரீஸ், சென்னை - 600004. ✆ 75500 98666.

மகாத்மா காந்தி தனது வாழ்க்கை வரலாறை 'சத்திய சோதனை' வாயிலாக பதிவு செய்துள்ளார். ஆனால்   காந்திஜியின் இணையரான கஸ்தூர்பாவின் வாழ்க்கை வரலாறை அறிந்து கொள்ளும் வகையிலான பதிவுகள் மிகக்குறைவு. காந்திஜியின் கருத்துகள் மூலமாகவே கஸ்தூர்பாவை புரிந்து கொள்ள முடிகிறது. உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில், கஸ்தூர்பாவுக்கும் காந்திஜிக்கும் இடையேயான உரையாடல்களை புனைவாக இந்நூல் பதிவு செய்கிறது. 

பெரும் பிடிவாதக்காரரான காந்திஜியுடன் பல்வேறு சமயங்களில் கஸ்தூர்பா முரண்பட்ட துண்டு.  அச்சமயங்களில் அவர்களுக்கு இடை யே நிகழ்ந்த உரையாடல் நெகிழச் செய்கிறது. எத்தனை பிணக்குககள், கருத்து வேறுபாடுகள் இருப்பினும் மகாத்மாவுடன் இணைந்து பயணித்ததில் கஸ்தூர்பாவுக்கு நிகர் அவரே. 

நோய்வாய்ப்பட்டு ஆபத்தான நிலையில், உடல்நலம்    தேறும்   பொருட்டு மருத்துவர் அறிவுறுத்தியும் மாட்டுப்பால் அருந்த மறுத்த கணவரை ஆட்டுப்பால்   அருந்த வைத்த கஸ்தூர் பாவின் சமயோஜிதம் இருவரும் அன்பாக, ஆதரவாக, இணக்கமாக வாழ்ந்ததை எடுத்துக் காட்டுகிறது. 

தான் சொல்வதைத்தான் கஸ்தூர்பா கேட்க வேண்டும் என்று காந்திஜி நினைத்தார். ஆனால் தன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல்,  கணவருடன் இணைந்து வாழ்ந்த காஸ்தூர்பா ஆச்சர்யப்படுத்துகிறார்.     கருத்து வேறுபாடுகள் பல இருப்பினும் தனி மனித விரோதம் இருந்ததில்லை என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.