இந்த ஆயுதங்களால்தான் - அமர்காந்த் (தமிழாக்கம் - கிருஷாங்கினி); பக்.1,057; ரூ.1,330; சாகித்திய அகாதெமி, சென்னை-18; ✆ 044-24311741.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற 'இன்ஹின் ஹத்தியாரோன் சே' எனும் ஹிந்தி மொழியில் வெளியான நாவலை கிருஷாங்கினி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தனது சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலத்தின் பலியா எனும் பின்தங்கிய கிராமத்தில் உள்ள மக்களிடம் இருந்த சுதந்திரப் போராட்டத் தாக்கத்தை நாவலாசிரியர் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார்.
இந்த நாவல் 1942-இல் நடைபெற்ற 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் போது பலியாவுக்கு பத்து நாள் சுதந்திரம் கிடைக்கிறது. காந்தி, நேரு போன்ற தலைவர்கள் நேரடியாக கலந்து கொள்ளாமல் அவர்களின் அஹிம்சை, சத்யாகிரகம், ஒத்துழையாமை எனும் தத்துவத்தை கொண்டு மக்கள் போராடினர். பத்து நாள்களில் மக்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் இருந்தனர். பின்னர் ஆங்கிலேய ராணுவப்படை சுதந்திரத்தை பறிக்கிறது. இருந்தாலும், இந்தச் சுதந்திரத் தாகம் போராட்டக்காரர்களிடமிருந்து அனைத்து மக்களிடமும் தொற்றிக் கொள்கிறது.
இதோடு அந்த காலகட்டத்தில் இருந்த சமூக அமைப்பை அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். குறிப்பாக கல்வி, பெண் விடுதலை உள்ளிட்ட சமூக விடுதலையை முன்னிறுத்தியுள்ளார்.
டேலா, நம்ரதா, பகஜோகினி உள்ளிட்ட பெண் கதாபாத்திரங்கள் கதையில் உயிரோட்டமாக வந்து செல்கின்றனர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் அது கடைக்கோடி மக்கள் வரை ஏற்படுத்திய தாக்கத்தையும் அகிம்சை எனும் ஆயுதத்தைக் கொண்டு தான் சுதந்திரத்தை பெற முடியும் என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் அமர்காந்த்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடக்கம்!
பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் சமுதாயத்தைக் கட்டமைப்போம்: குடியரசுத் தலைவர் மகளிர் நாள் வாழ்த்து!
ஈரான் பள்ளி மீது தாக்குதலில் 165 சிறுமிகள் கொல்லப்பட்டதற்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை: டிரம்ப்

பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

