ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கட்சி அரசியலிலிருந்து மக்கள் அரசியல்

News image
Updated On :13 பிப்ரவரி 2023, 9:48 am

DIN

கட்சி அரசியலிலிருந்து மக்கள் அரசியல் (மாற்று அரசியலுக்கு ஓர் அறிமுகம்) - க.பழனித்துரை; பக்.128; ரூ.150; அடையாளம், புத்தாநத்தம், திருச்சி மாவட்டம்;     ✆ 04332-273444.

மன்னராட்சியால் அவதிப்பட்ட மக்கள் தங்களது பிரச்னைகளைத் தீர்ப்பதற்காகப் போராடி, மக்களாட்சி முறைக்கு வந்தது சிலிர்ப்பூட்டும் நிகழ்வு.  மக்களாட்சியில் அரசியல் கட்சிகளின் இருப்பு முக்கியமானது. ஆனால், கட்சிகளால் மக்கள் விரக்தி அடைந்துள்ள நிலையில், மாற்று அரசியலை யோசிக்கும் கருத்துகளை நூலாசிரியர் முன்வைக்கிறார்.

மங்கிவரும் மக்களாட்சி, ஏன் இந்தத் தேக்க நிலை, அரசியலின் தாழ்நிலை, நமது ஆளுமையும் நிர்வாகமும், குறைந்தபட்ச மக்களாட்சியில் நாம், மக்களாட்சியை மாண்புறச் செய்வது எப்படி?, மக்களாட்சியைக் கட்டமைப்பது எப்படி?, மக்களை அதிகாரப்படுத்துவோம், குடிமக்கள் தயாரிப்பு, அரசியல் கட்சிக்கு ஊதியம்,  நாம் தேடும் புதிய அரசியல், நாம் தேடும் தலைமை போன்ற 13 தலைப்புகளில் உள்ள கட்டுரைகள் அரசியல் சீர்திருத்தத்தையும், நாடாளுமன்ற நிர்வாகத்துக்கான வலிமையையும் எடுத்துரைக்கிறது. 

சாமானியர்கள் இன்று அரசியலில் வலிமை பெற முடியாத நிலையில் அவர்கள் அதிகாரத்தைப் பெறுவதற்கான வழிகள்,   அரசியல் கட்சிகளுக்கு ஊதியம் அளித்தால் ஊழலைத் தவிர்க்க முயற்சிக்கலாம் என்று பலவிதமான சிந்தனைகளை நூலாசிரியர் முன்வைக்கிறார். காந்தியும் மார்க்ஸýம் போல இன்னொரு தலைமை நாட்டுக்கு அவசியம் தேவை என்பதனையும் நூலாசிரியர் முன்வைக்கிறார்.  நாடாளுமன்றச் சீர்திருத்தம் தேவை என்ற கருத்து முன்மொழியப்பட்டிருக்க வேண்டிய நேரத்தில் வந்திருக்கும் நல்லதொரு நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.