ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

பெரியபுராண ஆராய்ச்சி - டாக்டர் மா. இராசமாணிக்கனார்; பக். 320; ரூ. 225; பூம்புகார் பதிப்பகம், சென்னை - 108; ✆ 044 - 2526 7543.

சைவ சமயத்தில் ஏராளமான புராண நூல்கள் இருந்தாலும் மூன்று நூல்கள் மட்டுமே சிவனின் முக்கண் என்று சிறப்பாகப் போற்றப்படுகின்றன. அம்மூன்றனுள் பெரியபுராணமும் ஒன்று. சேக்கிழார் எழுதிய  பெரியபுராணத்தை வரலாற்றுக் கண் கொண்டு நோக்கி பல அரிய கருத்துகளை வழங்கியுள்ளார் தமிழில் ஆய்வு வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றியுள்ள இந்நூலாசிரியர்.

நாயன்மார்களைப் பற்றி 'திருத்தொண்டத் தொகை' பாடிய சுந்தரமூர்த்தி சுவாமிகளின் காலத்தையும், அந்நூலை சற்று விரிவுபடுத்தி 'திருத்தொண்டர் திருவந்தாதி' பாடிய நம்பியாண்டார் நம்பிகளின் காலத்தையும், இவ்விரு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு 'திருத்தொண்டர் புராணம்' எனும் 'பெரியபுராணம்' பாடிய சேக்கிழாரின் காலத்தையும் பல்வேறு தரவுகளின் வழியே உறுதிசெய்துள்ளார் நூலாசிரியர்.

மேலும், சேக்கிழாரை ஆதரித்த மன்னன் அநபாயன் என்பான் யார் என்பது குறித்து சைவ உலகில் பல்வேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில், இந்நூலாசிரியர் 'அநபாயன்' என்ற சிறப்புப் பெயர் பெற்றவன் இரண்டாம் குலோத்துங்கனே என்று நிறுவுகிறார்.

'சேக்கிழார் புராண'த்தில் சோழ மன்னன் சமணக் காப்பியமான 'சீவக சிந்தாமணி'யைப் படித்து மகிழ்ந்திருந்தபோது, சேக்கிழார், 'அந்நூல் சமணர் செய்த பொய்ந்நூல். சிவகதையைப் படிப்பதே இம்மைக்கும் மறுமைக்கும் நலம் பயக்கும்' என்று கூற, மன்னர் சேக்கிழாரையே அந்நூலை எழுதச்சொல்ல, அவர் எழுதிய நூலே திருத்தொண்டர் புராணம் எனும் கருத்தையும் உறுதிபட மறுக்கிறார் நூலாசிரியர்.

மேலும், நாயன்மாராகிய அறுபத்து மூவரின் காலத்தை வரையறுத்திருப்பதோடு, அவர்களில் யார் யார் தேவார மூவர் காலத்திற்கு முற்பட்டவர், யார் யார் அவர்களின் சமகாலத்தவர், யார் யார் அவர்களுக்குப் பிற்பட்டவர் என்பதையும் நூலாசிரியர் பட்டியலிட்டுள்ளார்.

காய்தல் உவத்தல் அகற்றி பெரியபுராணத்தை ஆய்வு செய்திருக்கும் இந்நூல் சைவ சமயிகளுக்கு ஒரு கண்திறப்பாக இருக்கும் எனத் தயக்கமின்றிக் கூறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.