இந்திய சுதேச சமஸ்தானங்கள் ஒருங்கிணைப்பு - இலந்தை சு இராமசாமி; பக். 240; ரூ.270; சுவாசம் பதிப்பகம், சென்னை-17; ✆ 81480 66645.
ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இந்தியா 1947-இல் விடுதலை பெற்றது. பல்லாண்டுகள் தங்களால் ஆளப்பட்ட இந்திய நிலப்பரப்பு ஒரே நாடாக விடுதலை பெறுவதை பிரிட்டன்
விரும்பவில்லை. எனவே, சுதந்திரமாகச் செயல்பட்டு வந்த சமஸ்தானங்கள் தாங்கள் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் எதில் விருப்பம் உள்ளதோ அதில் இணையலாம் அல்லது தனித்தும் இருக்கலாம் என்றது பிரிட்டன்.
தங்களது ஆடம்பர வாழ்க்கையை இழக்க விரும்பாத சுதேச சமஸ்தான மன்னர்கள் பெரும்பாலோர் இந்தியாவுடன் இணைய விரும்பாமல் முரண்டு பிடித்தனர். ஜுனாகாட்,
ஹைதராபாத் போன்ற சமஸ்தானங்கள் மத அடிப்படையில் பாகிஸ்தானுடன் இணைய விரும்பின. அப்போது இருந்த சமஸ்தானங்களின் எண்ணிக்கை 565.
இவற்றை பலவிதமான தந்திர உபாயங்களுடன் பாடுபட்டு இணைத்தவர்கள், அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேலும், அன்றைய மத்திய அரசின் செயலராக இருந்த வி.பி.மேனனும் தான்.
பிரிட்டன் ஆட்சிக்கு முன் அரசியல்ரீதியாக ஒரே நாடாக இருந்திராதபோதும் ஆன்மிகரீதியாக இந்தியா ஒரே நாடாகத் திகழ்ந்ததைக் குறிப்பிட்டே நூல் தொடங்குகிறது. அன்றைய சுதேச மன்னர்களின் களியாட்டங்கள், அடக்குமுறை ஆட்சி, ஆங்கிலேயரிடம் அடிமையுணர்வு ஆகியவற்றை தெளிவாகச் சுட்டிக்காட்டி இருக்கிறார் நூலாசிரியர்.
எனினும், வாக்குறுதிகளை மீறி மன்னர் மானியத்தை ஒழித்ததையும், ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதையும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியா உருவான ஆரம்பகால நாள்களை அற்புதமாக விளக்குகிறது இந்நூல். வரலாற்று ஆர்வலர்களுக்கு இந்நூல் மிகவும் பிடிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
மணிப்பூரில் பழங்குடியினர் பாதிக்கப்பட்டபோது அமைதி காத்த குடியரசுத் தலைவர் எங்களைக் குறிவைப்பது ஏன்? - மம்தா

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
அரசியலுக்கு அப்பாற்பட்டது குடியரசுத் தலைவர் பதவி: பிரதமர் மோடி

சரியான வணிகம் இல்லை! அஜித் படத்திலிருந்து விலகிய பிரபல நிறுவனம்?
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

