ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தமிழக நாட்டுப்புறக் கலைகளும் வரலாறும்

News image
Updated On :9 ஜனவரி 2023, 8:17 am

DIN

தமிழக நாட்டுப்புறக் கலைகளும் வரலாறும் - முனைவர் ப. பாலசுப்பிரமணியன்; பக்.184; ரூ.200; அழகு பதிப்பகம், சென்னை-49; 044-26502086.

நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக நூலகராகப் பணியாற்றும் நூலாசிரியர் எழுதிய நூல். நாட்டுப்புறக் கலை குறித்த நூலை மண்வாசம் மாறாத கிராமிய உரையில் படிக்கும்பொழுது 32 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் கவனம் ஈர்க்கின்றன. 

கும்மி, கோலாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், தெருக்கூத்து, தோற்பாவை, நிழற்கூத்து, பொய்க்கால் குதிரையாட்டம், கணியான் கூத்து என 100-க்கும் மேற்பட்ட கலைகள் உள்ளன.  கரகத்தில்  பூங்கரகம்,  சக்திக் கரகம்,  ஆட்டக் கரகம் எனப் பல வகைகள் உள்ளன.

கரகத்தை அமைக்கும் முறை,  இறைவனை சேவிப்பதற்கு ஆடப்பெறும் ஆட்டம் 'சேவையாட்டம்',  அதில் இடம்பெறும் பாடல்கள், ஆட்ட அமைப்பு போன்ற அபூர்வ தகவல்கள் ஏராளமாக நூலில் இடம்பெற்றுள்ளன. 

நாட்டுப்புறக்கலைகள் நம் தொன்மையான பாரம்பரியத்தின் அடையாளங்கள். அவை அழிந்து போகாமல் காக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் இவ்வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது. குறும்படங்களை இயக்கும் இளைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்களுடன் இணைந்து குறும்படங்களையும் ஆவணப்படங்களையும் எடுக்க முன்வர வேண்டும் என்கிற நூலாசிரியரின் அழைப்பு வரவேற்புக்குரியது. தமிழர்களின் பாரம்பரியத்தை அறிய விரும்புவோர் வாசிக்க வேண்டிய நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.