ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன்;  பக். 168;  ரூ. 170; விகடன் பிரசுரம், 757 அண்ணா சாலை, சென்னை-2.

'மெல்லிசை மன்னர்'   எம்.எஸ். விஸ்வநாதன், 'விகடன்' இதழில் தொடர்ந்து 25  வாரங்கள் எழுதிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு அருகில் உள்ள எலப்புள்ளி கிராமத்தில் பிறந்து வளர்ந்தது முதல், திரைப்படப் பாடல் மீது கொண்ட ஈர்ப்பால், திரைப்படக் கொட்டகையில் தேநீர் விற்கும் சிறுவனாக வேலையில் சேர்ந்தது, பி.யூ. சின்னப்பா - பி. கண்ணாம்பா நடித்த 'கண்ணகி' திரைப்படத்தில் பால கோவலனாக நடித்து அக்காட்சி படத்தில் இடம்பெறாமல் போனது, டி.எஸ். பாலையா நாடகக்குழுவில் சேர்ந்து நடிகரானது, எஸ்.எம். சுப்பையா நாயுடுவிடம் உதவியாளராக இருந்தபோது முதல் முதலாக ஒரு திரைப்படப் பாடலுக்கு இசையமைத்தது என தனது வாழ்க்கைப் பாதையை கால வரிசைப்படி விவரித்துள்ளார். 

மேலும், தன்னையும் ராமமூர்த்தியையும் இணைத்து என்.எஸ். கிருஷ்ணன் இசையமைப்பாளர்களாக அறிமுகப்படுத்தியது, 

எம்.ஜி.ஆரின் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்துக்கு இசையமைக்க தான் மறுத்தபோது எம்.ஜி.ஆர். சாதுரியமாகத் தன்னை சம்மதிக்க வைத்தது, கண்ணதாசனுடனான முதல் சந்திப்பிலேயே தனக்கு அவரோடு மோதல் ஏற்பட்டு பிறகு நெருங்கிய நண்பர்களானது, இந்திய - பாகிஸ்தான் போரின்போது திரைப்படக் கலைஞர்கள் குழு எல்லைப் பகுதிக்குச் சென்று கலை நிகழ்ச்சி நடத்தியது என முக்கிய நிகழ்வுகளை சுவைபடக் கூறியிருக்கிறார் மறைந்த எம்.எஸ்.வி.

குறிப்பாக, மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் டி.ஆர். சுந்தரம் ஹிந்திப் பாடல்களைப் போல இசையமைக்க வேண்டும் என்று கூறியபோது மறுத்தது, கே.வி. மகாதேவன் தொடர்ந்து இசையமைத்து வந்த தேவர் பிலிம்ஸ் நிறுவனம் தன்னை இசையமைக்க வேண்டுமெனக் கேட்டபோது தனது தாயார் தன்னைக் கடிந்துகொண்டது இப்படி அனைத்து செய்திகளுமே புதிதாகவும் வியப்பாகவும் உள்ளன.  தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல் நிகழ்வுகளை மட்டுமே பதிவு செய்திருப்பது எம்.எஸ்.வி.யின் தனிச்சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.