உள்ளத்தனைய... - கு.முத்துசாமி; பக்.376; ரூ.390; சுதர்சன் புக்ஸ் & கிராஃப்ட்ஸ், நாகர்கோவில்- 629 001; ✆ 04652 403422.
தூத்துக்குடி மாவட்டத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த நூலாசிரியர் போராட்டத்தோடு கல்வி பயின்று, ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, முதன்மைக் கல்வி அலுவலர் வரையில் அரை நூற்றாண்டு கல்வித் துறையில் பணியாற்றினார். நாட்டு நலப் பணித்திட்டம், ஆர்.எம்.எஸ். உள்ளிட்ட கல்விசார் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
தனது பணிக்காலத்து அனுபவங்களைத் தொகுத்தளித்துள்ளார். வழக்கமான சுயசரிதை நூல்களிலிருந்து இந்த நூல் மாறுபட்டுள்ளது. கல்வித் துறையில் ஆசிரியர்கள், ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள், வழிகாட்டுதல் என தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.
கல்வித் துறை ஒவ்வொரு ஆண்டிலும் ஏற்பட்ட படிப்படியான வளர்ச்சியை நூல் சரியான முறையில் விளக்குகிறது. நூலாசிரியர் பங்கேற்ற கருத்தரங்குகள், பயிற்சிகளின் அனுபவங்கள், முக்கிய பிரமுகர்களின் உரைகளையும் கூறியிருப்பது நிகழ்கால கல்வியாளர்களுக்கு ஓர் உந்துசக்தியாகவே இருக்கும்.
ஆசிரியர்கள் போராட்டத்தையும், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் , நாட்டுநலப் பணித் திட்டம் போன்றவற்றின் செயல்பாடுகளையும் நூலாசிரியர் விளக்கியுள்ளார். பல்கலை. சிண்டிகேட் உறுப்பினராகப் பணியாற்றியபோது, தான் கொண்டு வந்த கல்விக்கான திட்டங்களையும் நூலாசிரியர் பட்டியலிட்டுள்ளார். எளிய நிலையில் இருந்து உச்சம் தொட முயன்ற ஓர் ஆசிரியரின் சுவையான அனுபவங்களின் தொகுப்பே இந்த நூல். கல்வியாளர்களுக்கான வழிகாட்டி நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சென்னை - போடி விரைவு ரயில் மார்ச் 19 முதல் வாரத்தில் 6 நாள்கள் இயக்கம்!

தில்லி கேபிடல்ஸின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து கெவின் பீட்டர்சன் விலகல்!
பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசு

கரூரில் கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதல்: 18 மாணவர்கள் காயம்
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

