ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

DIN

தன் வரலாறு ஓர் இலக்கிய வடிவம் - தொகுப்பாசிரியர் தமிழவன்; பக்.160; ரூ.400;  சாகித்திய அகாதெமி,  சென்னை- 81; ✆ 044-24311741.

சாகித்திய அகாதெமியின் ஒருநாள் உரையரங்கில் படிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். 

நூலில் 6 கட்டுரையாளர்கள் மூலம்  தனிமனிதரின் அனுபவத் தொகுப்புகளில் இருந்து தன்வரலாறு எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் எடுத்துக்காட்டுகளுடன் தொகுப்பாசிரியர் விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது. புனைவு படைப்புக்கும், தன் வரலாறுக்கும் வேறுபாடு தெரியாமலேயே எழுத்தாளர்கள் இருப்பதாகவும் தொகுப்பாசிரியர் கவலைப்படுகிறார்.

திரைப்படங்களின் கதாபாத்திரங்களை உதாரணமாக்கி,  தன்வரலாறு தனி இலக்கியமாகுமா என்பதை  படிப்போர் எளிதில் புரியும்படி விளக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

'சு.ஆ.வெங்கடசுப்புராய நாயகர் தன்வரலாறு'  என்பது தனிப்பட்டவரின் வாழ்க்கைக் கதை என்பதற்கு அப்பால் அவர் வாழ்ந்த காலகட்டத்தின் சமூகம், அரசியல், வரலாறு, பிரெஞ்சு இலக்கியம் ஆகியன குறித்த தகவல் பேழையாக அமைய வேண்டும் என விளக்கம் தருகிறார்.  வீ.அரசுவின் கட்டுரையில்,  முக்கியமான எழுத்தாளர்களது தன்வரலாறு எப்படி அமைந்துள்ளது என்பது விளக்கப்பட்டுள்ளது.

அழகிய பெரியவனின் ' தமிழ் இலக்கிய மரபும், தலித்  தன்வரலாறுகளின் வரலாறும்' எனும் கட்டுரையில், அம்பேத்கர்,  இரட்டைமலை சீனிவாசன் எழுதிய தன்வரலாறுகளில்  மேற்கொண்ட ஆய்வும், சங்கப் பாடல்கள் மூலம் தற்கால மக்கள் நிலையை அறிய முயன்றிருப்பதும் அரிய செய்திகளாகும்.  தன்வரலாறு குறித்த ஆய்வை மையமாக வைத்து எழுதப்பட்டிருப்பது இலக்கிய ஆய்வாளர்களுக்கு சிந்தனைக்குரிய களம்தான்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.