ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

DIN

எளிய தமிழில் சோழர் வரலாறு -  (மூலம் - மா.இராசமாணிக்கனார்; எளிய தமிழில்- அச்சுதன் ஸ்ரீதேவ்); பக். 248; ரூ.270; சுவாசம், சென்னை-127; ✆ 81400 66645.

மூன்று பிரிவுகளைக் கொண்டது இந்த நூல். "சோழர்' என்ற சொல்லுக்கு பொருள் தேட முயன்று,  நீர் 'சூழ்நாடு'  என்பதே நாளடைவில் சோழநாடானது என்று நூலாசிரியர் விளக்குகிறார். முற்காலச் சோழர்கள், சங் க காலச் சோழர்கள், எழுச்சி பெற்ற சோழர்கள்,  பிற்காலச் சோழர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

முற்காலச் சோழர்கள் வரிசையில் சிபி, முசுகுந்தன், காந்தன், செம்பியன், இளஞ்சேட்சென்னி, கரிகாலன் ஆகியோரது வரலாறுகள் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

சங்கக் காலச் சோழர்கள் வரிசையில் சோழன் நலங்கிள்ளி, கிள்ளிவளவன், கோப்பெருஞ்சோழன், நெடுமுடிகிள்ளி ஆகியோரின் வரலாறுகளும் உள்ளன.  

சோழர்களின் வீரம்,  அவர்களது போர்கள், கொடை,  கட்டடக் கலை, சிற்பக் கலை, கல் மற்றும் உலோகங்களில் அவர்களது திறமை, சிறிய- பெரிய கற்கோயில்கள், அவர்களது காலத்து மக்கள், கலை, கலாசாரம் எல்லாம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது.

போர்கள் என்றால் கடற்போர்களில் அவர்களது அறிவு,  அதன் பயன்பாடு கடல் கடந்து சென்று ஆட்சிப் பகுதியை விரிவு செய்த நிலையில், தங்களது கலைகளை ஆட்சி நிர்வாகத்தை நிறுவுதல் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளன. வரலாற்று அறிஞர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் வாழ்த்துரை மகுடம்.

சரித்திரத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு இந்த நூல் உவப்பாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.