பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

DIN

கனவில் தொலைந்தவன் - கிரண் நகர்க்கர் (தமிழில் அக்களூர் இரவி); பக். 800; ரூ.1,100; சாகித்திய அகாதெமி, சென்னை - 18; 044 - 24311741.

ராஜபுத்திரர்களின் பண்பாட்டு அம்சங்களை விளக்கும் வரலாற்று நிகழ்வுகளுடன் புனையப்பட்ட இந்த நாவல் 16-ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் நடைபெறுகிறது. இதன் ஆங்கில மூலநூலான சாகித்திய அகாதெமி விருது பெற்ற "கக்கோல்ட்' என அமைந்திருந்தாலும், கதையின் போக்கை வெளிப்படுத்தும் வகையில் "கனவில் தொலைந்தவன்' எனத் தமிழில் தலைப்பிட்டுள்ளது சிறப்பு. 

மேவாரின் இளவரசன் மகராஜ் குமார் வழியில் கதை செல்கிறது. பிளவுபட்டிருந்த ராஜபுதன அரசுகளை முதன்முறையாக ராணா சங்கா ஒன்றிணைத்த நிலையில் வடகிழக்கில் லோடி வம்சத்தினர், தென்மேற்கில் குஜராத் ராஜ்ஜியம், தென் கிழக்கில் மால்வா ராஜ்ஜியம் என மூன்று புறமும் எதிரிகள் காத்திருந்தனர்.

தனது தம்பியின் அரியணை போட்டிக்கான சதிகளை மகராஜ் குமார் எதிர்கொள்கிறான்.  மேர்த்தாவின் இளவரசி உள்பட மூன்று பெண்களை திருமணம் செய்தாலும் இளவரசனின் மணவாழ்க்கை சரியாக அமையவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், போரைவிட சமாதானம்தான் நாட்டுக்கு நல்லது எனும் இளவரசனின் கோட்பாடு நேருக்கு நேர் போரிட்டு வெல்வது அல்லது உயிர் துறப்பதே வீரம் எனும் ராஜபுத்திரர்களின் கோட்பாடுக்கு முரணாக உள்ளது.  இதனால் அவன் ஒரு கோழையாக சித்தரிக்கப்படுகிறான். பின் கொரில்லா யுத்தி முறையை அறிமுகம் செய்து இரு போரில் மேவாருக்கு வெற்றி பெற்று தந்தாலும், அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. 

நூற்றாண்டுகளுக்கு மேலாக போர் செய்யும் மரபை மாற்றிக் கொள்ளாத ராஜபுத்திரக் கூட்டணி நவீன போர் யுக்தியுடன் 40 ஆயிரம் போர் வீரர்களுடனான பாபர் படை முன்பு சிதறுகிறது.  பாபர் வருகையோடு  "கனவில் தொலைந்தவன்' கலைகிறது.  ராஜபுத்திரர்களின் வரலாறு, பண்பாடு,  நாகரிகத்தை  அறிய உதவும் நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.