தூத்துக்குடி நினைவலைகள் இது மந்திர நகரம் - முத்துக்குமார், பக்.294, ரூ.325, சந்தியா பதிப்பகம், சென்னை-83, ✆ 044-24896979.
தூத்துக்குடியில் பிறந்து வெளிநாடுகளில், வெளியூர்களில் வாழ்வோர் சொந்த ஊருக்குச் செல்லும்போது எழும் எண்ணவோட்டத்தை அப்படியே பிரதிபலிக்கிறது இந்த நூல். வட்டார வழக்குச் சொற்களில் எழுதப்பட்டுள்ளது.
பனியமாதா பேராலய பெருவிழா, அய்யா வைகுண்டர் சாமி கோயில் திருவிழா போன்றவை மண்வாசனையுடன் விவரிக்கப்பட்டுள்ளது. வ.உ.சி.யின் கடைசிநாள்களைப் படிக்கும்போது, ஆழ்மனதில் மனதில் நம்மை அறியாமல் ரணமே ஏற்படுகிறது.
விடுதலைப் போராட்ட வீரர்கள் மாசிலாமணி பிள்ளை, ஜெபமணி அம்மாள், தூத்துக்குடி தந்தை குரூஸ் பர்னாந்து, தூத்துக்குடியில் பிறந்து இலங்கையில் அமைச்சரான பெரைரா, இலங்கையில் பிறந்து தமிழக அரசியல்வாதியான எஸ்.சி.சி. அந்தோணி பிள்ளை, இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களுக்காகப் பாடுபட்ட வழக்குரைஞர் நடேசய்யர், அவரது மனைவி மீனாட்சி, பாரதியார் உருவப்படத்தை வரைந்த பாஷ்யம் (எ) ஆர்யா, அந்தோனி பர்னாந்து, பீட்டர் மொராயஸ், ஜே.பி.ரோட்ரிக்ஸ், ஜெராமியா பெர்னாண்டஸ், நகராட்சி வளர்ச்சிக்கு உதவிய ரோச் குடும்பத்தினர், இயக்குநர் டி.பி.கஜேந்திரன் உள்ளிட்டோரின் அறிமுகம் நூலின் சிறப்பை மேலும் மெருகூட்டுகின்றன.
ராணி மங்கம்மாள், சொக்கநாத மன்னர் பற்றிய தகவல்கள் இதுவரை அறியாதவை. தூத்துக்குடியின் முக்கிய பிரமுகர்கள், முக்கிய நிகழ்வுகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!
வெல்லும் தமிழ்ப் பெண்களே... உங்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின்
மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசு
அசத்தும் கென்-ன் யூத் டிரைலர்!
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

