ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல்

News image
Updated On :31 ஜூலை 2023, 1:35 pm

DIN

சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல் - மே.து.ராசு குமார்; பக்.228; ரூ.320; நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை - 50, ✆ 044 - 26359906.

'கோயில்  இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்'  என்று ஆன்றோர்கள் சொல்லியதற்கும் காரணம் உண்டு.  கோயில் இருந்தால் திருவிழா நடக்கும்.  மக்கள் கூடுவார்கள். 

சந்தைகள், கடைகள் ஏற்படுத்தப்பட்டு வியாபாரம் நடக்கும்.  பலருக்கும் தொழில் கிடைக்கும். வருமானம் அதிகமாகும். இதை உணர்ந்தே மன்னர்கள் பெரிய கோயில்களைக் கட்டி வைத்து,  அவற்றின் செயல்பாட்டுக்கு நிலங்களைத் தானமாக அளித்தனர். 

இதனால்தான் கோயில்கள் இன்றளவும் ஒரு நிறுவனமாக செயல்படுவதுடன் சிலநூறு குடும்பங்கள் அதனைச் சார்ந்து வாழ்ந்து வருகின்றன.  இதை ஆதாரத்துடன் விளக்கும் புதிய சிந்தனையிலான ஆசிரியரின் படைப்புதான்  இந்த நூல். 

கோயில்களுக்கு சோழர் காலத்தில் நிலம் வழங்கப்பட்டதன் பின்னணி, அரசின் பங்களிப்பு, கோயிலுக்கு எதிரான குற்றங்கள், கோயில் நில உற்பத்தியாளர்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் கோயில்களைப் பற்றியும் நிலவுடைமைப் பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் கல்வெட்டு ஆதாரங்களுடன் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

தொல்லியல் துறை சார்ந்த பணி அனுபவத்தோடு கல்வெட்டு ஆதாரங்களைத் தொகுத்து வடிவமைத்துள்ள இந்த நூலில் கோயில் நிலங்கள் யாருக்கு எந்த வகையில் பயன்பட்டன? அதனால் ஏற்பட்ட மீட்சி என்ன? என்பதையும் விளக்குகிறது. மேலும், இறைபணியில் ஈடுபட்டவர்களுக்கு எந்த அடிப்படையில் நிலம் தானமாக கொடுக்கப்பட்டது என்பதை சோழர்கால கல்வெட்டு ஆதாரங்களுடன் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.