சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

மக்களுக்கான நாடாளுமன்றம் - இரா. செழியன் (தமிழில் - அரங்க சுப்ரமணியம் - ஈரோடு எஸ்.ஆர்.எஸ்.); பக். 676; ரூ. 1,000; கொங்குநாடு பப்ளிகேஷன்ஸ் (இந்தியா) பி. லிமிடெட்,  ஈரோடு - 638011; ✆ 0424 - 2251545.  

சிறந்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவரான இரா. செழியனின் பேச்சுகள், விவாதக் குறிப்புகள் தொகுக்கப்பட்டு ஆங்கிலத்தில்  'பார்லிமெண்ட் ஃபார் த பீப்பிள்' என்ற தலைப்பில் வெளியான நூலின்  மொழிபெயர்ப்பு. 1962 முதல் 1984 வரையில் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் உறுப்பினராக இருந்த அவரது முக்கிய பதிவுகள்  தொகுக்கப்பட்டுள்ளன.

அனைத்து மொழிக் குழுக்களுக்கும் சம அந்தஸ்தும் வாய்ப்பும் அளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டால் ஒழிய பிரச்னைக்குத் தீர்வு காணப்படப் போவதில்லை என்று தொலைநோக்குடன் குறிப்பிட்டிருக்கிறார் செழியன். இரு ஆண்டுகள் தொடர் முயற்சியால், யுபிஎஸ்சி தேர்வுகளை எட்டாவது அட்டவணையிலுள்ள மொழிகளிலும் எழுதலாம் என்று முதல்முதலாக மத்திய அரசு உறுதியளித்ததையே தன்னுடைய சாதனையாகக் குறிப்பிடுகிறார்  அவர்.

'மூல ஆவணங்களிலிருந்து சான்றுகளைச் சேகரித்தேன்; விவாதத்தின்போது என் கருத்துகளை நிதானமாக முன்வைத்தேன், அச்சுறுத்தல் அல்லது தேவையற்ற குறுக்கீடுகள் ஏற்படும்போது ஆத்திரப்படாமல் இருந்தேன்' - நாடாளுமன்றச் செயல்பாடுகள் தொடர்பாக இரா. செழியனின் இந்த வரிகளே அவர் இன்றும் பேசப்படக் காரணம் எனலாம்.

மக்களின் கோரிக்கைகள், ஏக்கங்கள், நம்பிக்கைகள், அச்சங்கள், விரக்திகளை இரா. செழியனின் உரைகள் பிரதிபலித்தன என்ற மக்களவைத் தலைவராக இருந்த சோமநாத் சாட்டர்ஜியின் அணிந்துரை வரிகள் மிகையற்றவை.

அணிந்துரை எழுதியோர் பட்டியலே நூலின் சிறப்பை அறிவிக்கும் - ஆர். வெங்கடராமன், ஐ.கே. குஜ்ரால், ஏ.பி. வாஜ்பாய், பிரணாப் முகர்ஜி, நிஜலிங்கப்பா, ராமகிருஷ்ண ஹெக்டே,  ரபி ராய், விஐடி ஜி. விசுவநாதன்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.