உலகச் சொற்கள் அனைத்திலும் தமிழின் ஊடுருவல் - அ. கோவிந்தன்; பக். 442; ரூ. 500; தி ரைட் பப்ளிகேஷன், சென்னை -17; ✆ 044-2433 2682.
ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு அதன் தொன்மையும், வளமையும் மட்டும் போதாது; தொடர்ச்சியாக மக்களின் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் பயன்பட்டுக் கொண்டிருத்தல் வேண்டும். அவ்வாறு உலகம் முழுவதிலும் பயன்பாட்டில் உள்ள 15-க்கும் மேற்பட்ட மொழிகளில் தமிழே வேர்ச்சொல்லாகப் பரவியுள்ளதை ஆய்வு செய்து நிறுவியுள்ளார் இந்நூலாசிரியர்.
ஒன்று முதல் பத்து வரை உள்ள அடிப்படைக் கணித எண்களாகட்டும், சித்திரை தொடங்கி பங்குனி ஈராக உள்ள பன்னிரு மாதங்களின் பெயர்களாகட்டும் இவற்றுக்கான பிறமொழிச் சொற்கள் அனைத்துக்கும் தமிழ் சொற்களே அடிப்படை என்கிறார் (ஒன்றைக் குறித்த 'ஏகம்' என்பதிலிருந்து 'ஏக்', காட்டில் வாழ்ந்த மனிதன் புல்லாங்குழல் இசைத்து ஏழு சுரம் கண்டான். அந்த சப்தமே ஏழுக்குரிய பெயரான 'சப்தமி').
'திராவிடம்' என்ற சொல்லுக்கான இந்நூலாசிரியரின் ஆய்வு மிகவும் சுவையானது. 'ஒன்றை ஒழித்துக்கட்டுவதைத் தீர்த்தல்' என்று கூறுவர். அவ்வாறு கடற்கோளினால் தீர்க்கப்பட்ட, அதாவது மூழ்கடிக்கப்பட்ட இடம் தீறு ஆவு இடம் எனப்பட்டு, அச்சொல் திராவிடம் என்றும், தீறு ஆவிட இயன் என்பது திராவிடன் என்றும் வடமொழியாகி இருக்கக்கூடும்' என்றும் குறிப்பிடுகிறார்.
மேலும், தமிழ்ச் சொற்களின் கூட்டுத் திரிபுகளால் சம்ஸ்கிருதச் சொற்கள் எழுந்தன என்று குறிப்பிடும் நூலாசிரியர் அப்படி எழுந்த சொற்களைப் பட்டியலிட்டுள்ளார். எடுத்துக்காட்டாக, பேச்சி ஆய் பாஷை, பூப்பு ஆம் புஷ்பம், அஞ்சனா ஐயன் ஆஞ்சநேயன், வாரி உண்ண அன் வருணன், வார்த்து ஈய ஆயர் வாத்தியார்.
தமிழின் எல்லாச் சொற்களும் பல்வேறு மொழிகளுக்குப் பொருள் தந்துள்ளன என்பது இந்நூல் அடிக்கோடிடும் செய்தி. ஏற்க முடிகிறதோ இல்லையோ நூலாசிரியரின் உழைப்பு வியக்க வைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
மணிப்பூரில் பழங்குடியினர் பாதிக்கப்பட்டபோது அமைதி காத்த குடியரசுத் தலைவர் எங்களைக் குறிவைப்பது ஏன்? - மம்தா

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
அரசியலுக்கு அப்பாற்பட்டது குடியரசுத் தலைவர் பதவி: பிரதமர் மோடி

சரியான வணிகம் இல்லை! அஜித் படத்திலிருந்து விலகிய பிரபல நிறுவனம்?
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

