ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

கோபுலு - எஸ்.சந்திரமெளலி; பக்.136; ரூ.150; அபிநயா பிரசுரம் , சென்னை-17; ✆ 9791071218.

பிரபல ஓவியர் கோபுலுவின் நினைவுக் குறிப்புகள் அடங்கிய நூல் இது.  அவரது சுருக்கமான சுயசரிதை என்றே கூறலாம். 

கோபுலு சிறுவனாக இருந்தபோது தொடங்கிய ஓவிய ஆர்வமானது பயிற்சி பெற்று ஆனந்த விகடன் வார இதழில் படம் வரைய வாய்ப்பு பெற்றது முதல் ஓய்வுக் காலம் வரையிலான அனுபவ ஏடுகள் நம் கண் முன்னே விரிகின்றன.  

அத்துடன் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் நிலவிய அன்றைய தமிழக வாழ்க்கையையும் நம் கண் முன் தத்ரூபமாக காட்சியளிக்கின்ற வரலாற்றுப் பதிவாகவே தொகுத்து அளிக்கிறார் நூலாசிரியர். 

தந்தையுடன் வடநாட்டில் மேற்கொண்ட யாத்திரையின்போது மான் தோல் வாங்கிய கதை நல்ல நகைச்சுவை.  இவ்வாறு பல நகைச்சுவையான சம்பவங்கள் அபாரம்.

தீபாவளி மலர் தயாரிப்பின்போது ஓவியங்கள் தீட்டுவதற்காக திருவையாறு தியாகையர் நினைவிட தல யாத்திரையும் பிற பிரபல தல தரிசனங்களும் அருமையான ஃபிளாஷ்பேக்.

ஜெயலலிதாவின் ஆரம்ப கால 'ராசி சில்க்'  விளம்பரத்தை உருவாக்கியதும், 'ட்ரீம் கேர்ள்' என்ற ஹேமமாலினியின் ஆரம்ப கால விளம்பரத்தை வடிவமைத்ததும் கோபுலு என்பதெல்லாம் வியப்புச் செய்தி.

'தில்லானா மோகனாம்பாள்', 'வாஷிங்டனில் திருமணம்' ஆகிய கதைகள் தொடராக வெளிவந்தபோது,  கோபுலுவின் தனித்துவமான ஓவியங்களும் வெகுவாகப்  புகழ்பெற்றன.

ஓவிய வகைகளில் தனக்கென சொந்தமான ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு, ஒரு விளம்பர நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாகவும் நடத்திய கோபுலுவின்  நினைவுக் குறிப்புகள் தன்னம்பிக்கை ஊட்டுவதாக உள்ளன. இதழியல் ஆர்வலர்களுக்கு ஒரு தகவல் பொக்கிஷம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.