ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

சேமிப்பும் முதலீடும்! - சிவகாசி மணி கண்டன்; பக். 159, ரூ.190; விகடன் பிரசுரம், சென்னை -2; ✆ 044-4263 4283. 

சேமிப்பையும், முதலீட்டையும் சரியான திட்டமிடலுடன் மேற்கொண்டால் நிம்மதியான வாழ்க்கை அமைவது நிச்சயம்.  செல்வ மகள் சேமிப்புத் திட்டம்,   தங்கத்தில் லாபகரமாக முதலீடு,  பணவீக்க விகிதத்தைத் தாண்டிய வருமானம் தரும் பங்கு முதலீடு!,  மியூச்சுவல் ஃபண்ட்  முதலீடு! , நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற பங்கு சார்ந்த ஃபண்டுகள்! உள்பட  நூலில் மொத்தம் 25 அத்தியாயங்கள் உள்ளன.  மியூச்சுவல் ஃபண்ட் குறித்தே பெருமளவு அலசி ஆராயப்படுகிறது.

முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்வது,  ஒருவரது இடர்பாடுக்கு (ரிஸ்க்) தகுந்த திட்டங்கள் எவை, பணவீக்க விகிதத்தைக் காட்டிலும் கூடுதல் வட்டி கிடைக்க எதில் முதலீடு செய்வது? என்பதை அலசி ஆராய்ந்துள்ளார் நூல் ஆசிரியர். ஆயுள் காப்பீடு பாலிசிகளை முதலீட்டுத் திட்டமாகக் கருதக் கூடாது என்றும் அதற்கு மாற்றாக எதில் எல்லாம் முதலீடு செய்யலாம் என்பது குறித்தும்  வழிகாட்டப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பணத்தை வங்கியில் போட்டு வைக்கக்கூடாது  என்ற  கட்டுரை  அனைவராலும் நிச்சயமாக பாராட்டப்படும்.

முதலீட்டுத் திட்டங்களின் சாதக, பாதக அம்சங்கள், மாற்றுத் திட்டங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு வரி என்ன?,  சலுகை இருக்கிறதா என்பதற்கும்  விளக்கம் கிடைக்கிறது. கடைசி அத்தியாயமாக, 'முதலீட்டை சரியாகத் தேர்வு செய்யும் கலை'  இடம் பெற்றுள்ளது.  அனைத்து முதலீட்டாளர்களுக்கும் நூல் உதவிகரமாக இருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.