வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி - சோ.தர்மன்; பக். 154; ரூ. 150; அடையாளம், புத்தாநத்தம் - 621 310; ✆ 04332- 273444.
வில்லுப்பாட்டில் சிகரம் தொட்டவர் சாத்தூரைச் சேர்ந்த ச.பா.பிச்சைக்குட்டி (1922- 71). வில்லுப்பாட்டுக்குப் புத்துயிரூட்டி, நவீனங்களைப் புகுத்தி, மேடை மரியாதையைப் பெற்றுத் தந்தவர் அவர்.
தமிழ் இலக்கியப் புலமை, கர்நாடக சங்கீதத் தேர்ச்சி, புதிய மெட்டுகளைப் புகுத்திய திறமை, அசாத்தியமான குரல்வளம், அந்நாளைய பிரமுகர்களுடன் இயல்பான தோழமை, ஆபாசமில்லாத நகைச்சுவை, அரசியல் நையாண்டி, உயரிய இசை மேதைமை ஆகியவற்றால் சாதித்தவரின் சுருக்கமான வரலாற்றுப் பதிவு இந்நூல்.
நூலைப் படிக்கத் தொடங்கினால் கீழே வைக்கவே முடியாத வகையில், அழகிய தமிழ்நடையில், சுவாரசியமாக எழுதியிருக்கிறார், சாகித்திய அகாதெமி விருது பெற்ற சோ.தர்மன்.
நாடார்களிலிருந்து தான் இக்கலை முகிழ்த்திருக்க வேண்டும் என்ற தனது கருத்தை தக்க அவதானிப்புகளுடன் நூலாசிரியர் முன்வைத்திருப்பது சிறப்பு. ஆதாரக் கருவிகள் யாவும் பனைமரம் சார்ந்தவை என்ற அவரது சான்றாதாரம் ஆய்வாளர்கள் கவனிக்க வேண்டியது.
பிச்சைக்குட்டியை காஞ்சிப் பெரியவர் போற்றி ஆதரித்தது, தமிழறிஞர் ராய.சொக்கலிங்கத்துடனான அனுபவம், கொத்தமங்கலம் சுப்புவின் சோகம், பாவயாமி கீர்த்தனையை தமிழில் தந்த திறன், பிச்சைக்குட்டியால் உருவான ஈழத்துச் சீடர், என்.எஸ்.கிருஷ்ணனுடனான நட்புறவு, வில்லிசைக் குழுவில் இருந்தவர்களின் தனிப்பட்ட அனுபவங்கள் என வில்லிசை வேந்தரின் வாழ்க்கைப் பதிவுகள் ரசிக்க வைக்கின்றன. குறுகிய காலமே வாழ்ந்தாலும் தனது கற்பனையாற்றலால் வில்லுப்பாட்டுக் கலைஞர்களுக்கு பிச்சைக்குட்டி பெருமை சேர்த்தது எப்படி என்பதற்கான ஆவணம் இந்நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
மணிப்பூரில் பழங்குடியினர் பாதிக்கப்பட்டபோது அமைதி காத்த குடியரசுத் தலைவர் எங்களைக் குறிவைப்பது ஏன்? - மம்தா

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
அரசியலுக்கு அப்பாற்பட்டது குடியரசுத் தலைவர் பதவி: பிரதமர் மோடி

சரியான வணிகம் இல்லை! அஜித் படத்திலிருந்து விலகிய பிரபல நிறுவனம்?
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

