சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

சைவம் வளர்த்த தமிழ் - முனைவர் ப. பாலசுப்பிரமணியன்;  பக். 176;  ரூ. 185;  சங்கர் பதிப்பகம், சென்னை -49; ✆ 044 - 2650 2086.

ஆங்கிலம் வணிக மொழி, லத்தீன் சட்ட மொழி, கிரேக்கம் இசை மொழி, தமிழோ பக்தி மொழி என்று கூறுவார்கள். அதிலும் சைவ சமயம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள பணி அளப்பரியது.

இந்நூலில் 'தமிழ் வளர்ச்சியில் சைவம்' என்ற கட்டுரையில்  தொடங்கி, 'பக்தி இலக்கியத்தின் மறுமலர்ச்சிக் காலம்', 'சைவத் தமிழ் நூல்கள்', 'வான் கலந்த திருவாசகம்', 'வள்ளலார்', 'மறைமலை அடிகள்', 'திரு.வி.க'. 'மனோன்மணீயம் சுந்தரனார்', 'வ.உ.சி'., 'உ.வே.சா.' உள்ளிட்ட 23 தலைப்புகளில் சைவ சமயத்தால் தமிழ்மொழி வளர்ந்ததையும், தமிழ் மொழியால் சைவ சமயம் வளர்ந்ததையும் சிறப்பாக விவரித்துள்ளார் நூலாசிரியர்.

சிவனைப் போற்றுபவர் எவராயினும் அவர் கடவுளின் வடிவமாகவே கருதப்படுவார்.  ஞானசம்பந்தரோ பிறப்பால் அந்தணர், திருநாளைப்போவாரோ தாழ்த்தப்பட்டவர்,  சேரமான் பெருமான் அரசர், கண்ணப்பர் வேடர். ஆயினும் இவர்களிடையே எந்த வேறுபாட்டையும் சைவம் கற்பிக்கவில்லை என்கிற ஆசிரியர் கூற்று மிகவும் சரியானது. 

மேலும், சைவ சமயம் பெண்களை மதித்துப் போற்றி வந்ததையும் ஆசிரியர் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். பரவையார், சங்கிலியார், இசைஞானியார், காரைக்காலம்மையார், மங்கையர்க்கரசியார் ஆகியோர் சைவம் வளர்த்த பெண்மணிகளுள் முக்கியமானோர்.

சைவ சமயத்தின் தமிழ்ப் பணியை விரிவாக ஆய்வு செய்துள்ள ஆசிரியர், குறிஞ்சிக் கபிலர், பாம்பன் சுவாமிகள், ந. கதிரைவேற்பிள்ளை, ஆறுமுக நாவலர் போன்ற தமிழறிஞர்களின் சைவத்தொண்டையும் அறிமுகப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.