சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்

News image
Updated On :2 மே 2023, 10:31 am

DIN

இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும் - வீரபாண்டியன்; பக்.510; ரூ.510;  பாரதி புத்தகாலயம், சென்னை-18; ✆ 044-24330024.

சமூகக் கட்டமைப்பு, மீள் கட்டமைப்பு பற்றி பேசுவதோடு மட்டுமல்லாது தமிழகத்தின் நினைவுகளில் புறந்தள்ளப்பட்ட வரலாறையும் இந்த நூல் கவிஞர்கள், அவர்தம் கவிதைகள் வழி ஆய்வு செய்துள்ளது. 

அரசியல், போராட்டம், வன்செயல்களை மையப்படுத்திய மூன்று பாகங்களும் இருபதாம் நூற்றாண்டின் அரசியல் சமூக வரலாற்றைப் பேசுகின்றன.  பின்னி மில் போராட்டம், கோவை ஸ்டேன்ஸ் மில் போராட்டம்,  டிராம்வே குறித்த தொழிலாளர்களின் படைப்புகளையும் ஆய்வு செய்துள்ளது.

பாரதியார், கவிமணி, திருமூர்த்தி, நாமக்கல் கவிஞர் முதல் நவீனக் கவிஞர் வைரமுத்து வரையிலான 25 பேரின் கவிதைகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பது சிறப்பு.

இலக்கண வரம்புக்குள் இருக்கும் படைப்புகளை முதன்மைப்படுத்தாமல் பாடுபொருளை மையப்படுத்தியும், ஒரேயொரு வரியில் வரலாற்று நிகழ்வை மையப்படுத்திய கவிதைகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருப்பதும் பாராட்டத்தக்கது.

மேடையில் பாடுவதற்காக தோழர் ஜீவா எழுதிய பாடல்களை பதிவு செய்திருப்பதன் மூலம் வரலாற்று நிகழ்வுகளின் தேர்விலிருந்துதான் இந்நூலுக்கு கவிஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது புலனாகிறது.

பொதுவெளிக்கு வராத சில புதிய நிகழ்வுகளையும், காலப்போக்கில் கடந்துபோன பல முக்கிய நிகழ்வுகளையும் ஆய்வின் மூலம் இந்நூல் வெளிக்கொணருகிறது.

கவிதைகளை வாசித்து ரசிப்பதில் இருக்கும் மதிப்பீட்டைவிட, வரலாற்று நோக்கில் வாசிக்கும்போது அதன் மதிப்பீடு இன்னும் உயரும் என்பதை இந்நூல் வழியே நூலாசிரியர் நினைவூட்டுகிறார்.

வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவர்களும், சமூக அக்கறைகளை உள்ளடக்கிய கவிதைகளை நேசிப்போரும் வாசிக்க வேண்டிய நூல் இது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.