/

அமுதசுரபி தீபாவளி மலர்

News image
Updated On :20 நவம்பர் 2023, 1:58 pm

அமுதசுரபி தீபாவளி மலர் -  திருப்பூர் கிருஷ்ணன், சென்னை-101; ✆ 044- 2615 7819.

பழைய இலக்கியம், தற்கால இலக்கியம், பயண இலக்கியம், நாடகம், ஆன்மிகம், வாழ்வியல், கலை என அனைத்தையும் உள்ளடக்கிய கருவூலமாக இந்த மலர் அமைந்துள்ளது. பழைய இலக்கியமாக இலங்கை ஜெயராஜ், சுதா சேஷய்யன், பால சீனிவாசன் உள்ளிட்ட அறுவரின் கட்டுரைகளும்,   சிறுகதைகளாக சுபா, ஜோதிர்லதா கிரிஜா, மாத்தளை சோமு உள்ளிட்ட 13  பேரின் சிறுகதைகளும், தற்கால கவிதைகளாக, சிற்பி பாலசுப்பிரமணியம், அமுதபாரதி, இரா. மீனாட்சி, மதிவண்ணன் உள்ளிட்ட  24  பேரின் கவிதைகளும், தற்கால நாடகமாக இந்திரா பார்த்தசாரதியின் 'யார் ஸ்வாமி தஞ்சம்மா'வும் இடம்பெற்றுள்ளன.

இவை தவிர, கல்கி, லா.ச.ரா., ராஜம் கிருஷ்ணனின் கட்டுரைகளும், சுஜாதா, வெ. இறையன்பு, சரஸ்வதி ராமநாதனின் நேர்காணல்களும்  உள்ளன. தொல்லியல் குறித்த இரா. கலைக்கோவனின் கட்டுரையும், இ. சுந்தரமூர்த்தியின் இலக்கியக் கட்டுரையும், கண் மருத்துவம் குறித்த அ.போ. இருங்கோவேளின் கட்டுரையும் இடம்பெற்றுள்ளன.

பயண இலக்கியமாக, அரிசோனா, தாம்பரம், தில்லி, அமெரிக்கா, நியூஜெர்சி, நாமக்கல் ஆகிய ஊர்களில் இயங்கிவரும் தமிழ் அமைப்புகள் குறித்த கட்டுரையும், அமிருதசரஸின் பொற்கோயில் குறித்த கட்டுரையும், மேகாலயத்தில் உள்ள அரண்மனை குறித்த கட்டுரையும் இடம்பெற்றுள்ளன.

காலஞ்சென்ற ஓவியர் மணியம் குறித்த 'நூற்றாண்டு நாயகர் ஓவியர் மணியம்' கட்டுரையும் (க்ளிக் ரவி), மகாகவி பாரதியாருக்கும் புதுச்சேரி குள்ளச்சாமிக்கும் இருந்த தொடர்பை விவரிக்கும் 'மகான் குள்ளச்சாமியும் மகாகவி பாரதியும்' கட்டுரையும் (கிருங்கை சேதுபதி), கருமுத்து கண்ணன் குறித்த 'கண்ணன் என்னும் மன்னன்' கட்டுரையும் (சு. ஹரி தியாகராசன்) தனித்துக் குறிப்பிடத்தக்கவை.

இந்த மலர் எல்லாத் தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.