அம்மன் தரிசனம் தீபாவளி மலர்

அம்மன் தரிசனம் தீபாவளி மலர்
Updated on
1 min read

அம்மன் தரிசனம் தீபாவளி மலர்- ஜே.எஸ்.பத்மநாபன்; பக். 302; ரூ.200; அம்மன் தரிசனம் பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; ✆ 044- 2434 1674.

சிருங்கேரி சங்கராசார்யர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் ஸந்நியாச ஸ்வீகார பொன்விழா ஆண்டு மலராக அம்மன் தரிசனம் தீபாவளி மலர் தயாரிக்கப்பட்டுள்ளது. ராஜ
பாளையம் சுதர்ஸனம் ராமசுப்பிரமணிய ராஜா, கடையநல்லூர் ரகுநாத் தாஸ் மஹாராஜ், சென்னை ஆர்.கிருஷ்ணன், திருப்பூர் டி.ஆர்.ராமநாதன், மதுரை எஸ்.சங்கரநாராயணன் உள்ளிட்ட பலரும் பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் சிறப்புகளைச் சுட்டிக்காட்டி உள்ளனர்.

எது பக்தி, உண்மையான சுகம், பெற்றோர் கடமை, வாழ்வு நெறி, பஞ்சமஹா யக்ஞங்கள், மூவகை தானம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அவர் பல இடங்களில் அருளுரையாற்றியது கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளன.

மறுபிறவி, பந்தத்தின் ஸ்வரூபம், மானஸிக பூஜை, கர்மயோகம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இவருக்கு முன்னர் பீடாதிபதியாக இருந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் கூறியவை சிந்தனையைத் தூண்டும் வகையில் கேள்வி-பதில் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஊர்க்காடு சிவகாமியம்மை சமேத கோஷ்டீசுவரர் தேவாலயம், ஓங்காரேச்வர ஜ்யோதிர்லிங்கம், சாஸ்தாவின் அருள்பொங்கும் சப்தஸ்தலங்கள் போன்றவற்றுடன் உயிரைக் காத்து உள்ளத்தை குளிர்வித்த உத்தம சேவகன் (அனுமன் சிறப்பு), அற்புத ராமாயணம், வால்மீகி ராமாயணம் போற்றும் பெண்மையின் சிறப்பு ஆகிய கட்டுரைகளும் மலரை அலங்கரிக்கின்றன.

மொத்தத்தில் ஆன்மிக அன்பர்களுக்கு அருளை வாரி வழங்கும் மலராக இது அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com