லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்- கிரிஜா ராகவன்; பக்.240; ரூ.200; காயத்ரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-83; ✆ 044- 2489 8162.
ஹிந்து மதத்துடன் இரண்டறக் கலந்த ஒன்று குரு பக்தி. தீபாவளித் திருநாளில் குருவை வணங்கி ஞானத்தைப் பெற வேண்டும் என்பது முன்னோர்கள் காட்டிய வாழ்க்கை நெறி. அதனை உணர்த்தும் வகையிலான பல்வேறு கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது இந்த மலர். மகா பெரியவரின் அருளுரையில் தொடங்கி சுவாமி விமூர்த்தானந்தரின் நற்சிந்தனை, சித்தர்களின் வரலாறு, புண்ணியத் தலங்கள் என ஒரு பக்கம் தெய்விகக் கட்டுரைகள் வசீகரிக்கின்றன.
மற்றொரு புறம் சுப்ர பாலன், மாலன், ம.நித்யானந்தம், அழகியசிங்கர், பா.ராகவன், ரேவதி பாலு என பல ஆளுமைகளின் இலக்கியப் பதிவுகள் வியாபித்திருக்கின்றன. ஹிந்து மதத்தின் மேன்மையை மட்டும் எடுத்துரைக்காமல் ஜென் வாழ்வியல் முறைகள் குறித்த கட்டுரையும் சிறப்புடன் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
குருவைப் போற்றுவதன் அவசியத்தையும், அதனை உணர்த்தும் சம்பவங்களையும் தொகுத்து பல்வேறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சமகாலத் தலைமுறைக்கு கட்டாயம் கடத்த வேண்டிய கருத்துகளாக அவை உள்ளன.
ஏர்வாடி ராதாகிருஷ்ணன், திருப்பூர் கிருஷ்ணன், டாக்டர் ஜெ.பாஸ்கரன், ஜெ.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோரின் எழுத்துகள் மீள்வாசிப்புக்கு தகுதியானவை. மாங்காடு காமாட்சி, பழனி பாலதண்டாயுதபாணி, வடுவூர் கோதண்டராமர் உள்ளிட்ட கடவுள்கள் மற்றும் மகா பெரியவர், ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திரர், சிவன் சார் ஆகிய அவதார புருஷர்களின் வண்ணப் படங்களும் நிறைந்துள்ளன.
ஆன்மிகம், இலக்கியம், சிறுகதை, கவிதை, வாழ்க்கை, சித்த புருஷர்கள் சரிதை, புராணம், நகைச்சுவை என பல்சுவை களஞ்சியமாக வெளியாகியுள்ளது நிகழாண்டு மலர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!

புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி தொடர்!

ஐபிஎல் 2026ல் சிறந்த எகானமி: முதலிடத்தில் சிஎஸ்கே வீரர் அகீல் ஹொசைன்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

