விஜயபாரதம்  தீபாவளி மலர்

விஜயபாரதம்  தீபாவளி மலர்
Updated on
1 min read

விஜயபாரதம்  தீபாவளி மலர் - பி.வெள்ளைத்துரை; பக். 418;  ரூ.100;  பாரதிய கலாசார சமிதி, சென்னை-84; ✆ 044- 2642 1271.

நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து உணவு, மருத்துவம், அறிவியல், பாதுகாப்பு, அடிப்படை கட்டமைப்பு, தொழில்நுட்பத் தேவைகள் ஆகியவற்றுக்கு இந்தியா பிற நாடுகளைச் சார்ந்திருந்த நிலை மாறியுள்ளது.  இன்று அனைத்துத் துறைகளிலும் உலக அரங்கில் இந்தியா முன்னேறி பெரும் மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டிருப்பதை இந்த மலர் அட்டைப்படம் வாயிலாக எடுத்துரைக்க முற்பட்டிருப்பது அருமை. 

வழக்கமாக வெளிவரும் தெய்வப் படம் அடங்கிய  அட்டை அல்லாமல், இந்த ஆண்டு பல்வேறு துறைகளில் நாட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை எடுத்தியம்பும் வகையில் அமைத்திருப்பது பாராட்டுக்குரியது.

தேசம், தெய்விகம் இரண்டையும் கலந்த கலவையாக கதைகள், கட்டுரைகள், கவிதைகள் இடம்பெற்றிருக்கிறது பொக்கிஷம். அவை சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டிருப்பது மலருக்கு மேலும் வலு சேர்க்கின்றன. 

மலரில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கட்டுரையும் செய்தியாக மட்டுமல்லாமல் ஆவணமாக, வழிகாட்டியாகச் சேமிக்கப்பட வேண்டியவை. 

மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு, அண்டை நாடுகளுடன் ராஜதந்திர ரீதியிலான உறவு, உணவு உற்பத்தி ஆகியவற்றில் பாரதம் எவ்வாறெல்லாம் முன்னேறிக் கொண்டிருக்கிறது, உலகிற்கு எவ்வாறு உதவிக் கொண்டு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது என்பதை மலரின் பல்வேறு படைப்புகள் விரிவாக எடுத்தியம்புகிறது. விஜயபாரதம் தீபாவளி மலர் பொழுது போக்குக்காக அல்ல, பாதுகாத்துப் புரட்டிப் பார்க்க!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com