தெய்வத்தமிழ்

தெய்வத்தமிழ்
Updated on
1 min read

தெய்வத்தமிழ், டாக்டர் நா.பாரி, ரூ.500, பக்.312, சாய் சக்தி பதிப்பகம், சென்னை-39; ✆ 98419 37778.

பக்தியும் தமிழும் எப்படி பின்னிப்பிணைந்துள்ளன என்பதை தக்க ஆதாரக் கருத்துகளுடன் சுட்டிக்காட்டி,  170 கட்டுரைகள் மூலம் நூலாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்.

சூரியோதயத்தை வைத்து வாழ்க்கையின் இன்ப, துன்பங்களை இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை நூலாசிரியர் விளக்கியிருப்பது தன்னம்பிக்கைக்கான வழிகாட்டலாகும். நூலெங்கும் தமிழின் அரிய பெரிய வாழ்வியல் கருத்துகளை கூறும் நூலாசிரியர் 'குமரிக்கண்டமும் தமிழினத் தோற்றமும் வளர்ச்சியும்' எனும் பகுதியில், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த குடி என்பதற்கான பொருளை அறிவியல் நோக்கில் கூறியிருப்பது சிறப்பாகும்.

'லெமூரியாக் கண்டம்'  குறித்த விவரங்களையும், அறிவியல், வரலாற்றுப் பார்வையில் தொகுத்திருப்பது, தமிழ் ஆய்வு சிந்தனைக்குரியது. திருக்குறளானது தொல்காப்பிய காலத்துக்கு முற்பட்ட நூல் என்பதை எடுத்துரைத்துள்ளார். தற்போது திரையுலகம், தொலைக்காட்சி, பத்திரிகை உலகத்தால் தமிழும், தமிழர் பண்பாடும் எந்த வகையில் பாதிக்கப்படுகிறது என்பதையும் விளக்கியுள்ளார்.

மூத்த மொழியாக தமிழ் எப்படி விளங்கியது என்பதை மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறார். மாணவர்கள் படித்து பயனடையலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com