நாட்டுப்புற இராமாயணங்கள் (கம்பன் சொல்லாத கதைகள்) - பேரா. சு.சண்முகசுந்தரம்; பக்.473; ரூ.500; காவ்யா, சென்னை- 24; ✆ 044- 2372 6882.
ஹிந்துக்களின் இதிகாசமான ராமாயணத்தை அறியாதவர்கள் யாருமில்லை. அதைப் பின்பற்றுவோரும் உண்டு; விமர்சனம் செய்வோரும் உண்டு. கம்பனும் ராமர் பட்டாபிஷேகத்தோடு ராமாயணத்தைச் சொல்லவில்லை என்ற மனக்குறையும் உண்டு. ஆனால், பிற மாநிலங்களில், பல மொழிகளில் அதற்கு மேலும் பல கதைகள் உண்டு.
நாட்டுப்புறங்களில் கதைகள், பாடல்கள், கதைப் பாடல்கள், ஆட்டங்கள், கூத்துகள், வழக்காறுகள் வாயிலாக, ராமாயணம் சொல்லப்படும் விதத்தையும் நூலாசிரியர் ஆய்வு செய்து விவரித்துள்ளது மிகவும் சிறப்பு.
பின்னிணைப்பாக, சீதா கல்யாணம், ராமாயண ஏத்தப்பாட்டு, ஸ்ரீராமர் ஏத்தப்பாட்டு, ராமாயணக் கொம்மிப்பாட்டு, ராமாயண ஓயில் கும்மி போன்றவையும் சேர்க்கப்பட்டுள்ளன. இறுதியில் ஆய்வுக்குப் பயன்பட்ட 56 நூல்களின் விவரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி மேலும் தகவல்களை அறிய விரும்புவோருக்கு பயனுடையதாகவே இருக்கும். தமிழகத்தில் ராமாயணத்துக்குத் தொடர்புடைய இடங்கள் குறித்த விவரங்கள் சிறப்பு.
தசரதனின் சிறப்புகள், ராமன், சீதை, லட்சுமணன்... என கதாபாத்திரங்கள் தொடங்கி, லவ- குசன் வரையில் முழு ராமாயணத்தை கிராமப்புற மக்களுக்கும் புரியும் வகையில் நாட்டுப்புற நிகழ்வுகள் அமையப் பெற்றன என்பதால், இந்த நூல் எளிய நடையிலேயே உள்ளது. ராமாயணத்தைப் புதிய கோணத்தில் அறிய விரும்புவோருக்கு இந்த நூல் வழிகாட்டியாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!

புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி தொடர்!

ஐபிஎல் 2026ல் சிறந்த எகானமி: முதலிடத்தில் சிஎஸ்கே வீரர் அகீல் ஹொசைன்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


