/

புனைவுவெளி

News image
Updated On :23 அக்டோபர் 2023, 12:14 pm

புனைவுவெளி - நா.விச்வநாதன்; (தொகுதி-1; பக்.136; ரூ.180; தொகுதி-2; பக்.128; ரூ.150);  பேசும் புதிய சக்தி, திருவாரூர்- 1; ✆ 94897 73671.

'பழசை  நிராகரித்துவிட்டு இதுவே நவீனம் என்று உயர்த்தி பேசுவதும், பழசே எங்கள் புதையல்அதற்கு மேலாக எதுவும் இல்லை என்று சொல்வதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. 'மணிக்கொடி', 'எழுத்து', 'தேனீ', 'சூறாவளி', 'கிராம ஊழியன்' என வரிசையாக வந்த இலக்கிய இதழ்களின் போக்கு தீவிர இலக்கியம் படைத்தது. சி.சு.செல்லப்பா, பி.எஸ்.ராமையா முதலியோர் தொடங்கிய இந்தப் பணி வளர்ந்தது என்றும்,  'தமிழில் எல்லாமே இருக்கின்றன. வேறு எதுவும் தேவையில்லை  என்று பண்டிதர்கள், பேராசிரியர்கள், அவர்களைத் தொடர்ந்து அரசியல் சார்பாளர்கள் என எதிர்க் கருத்தும் எழுந்தது' என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

தீவிர இலக்கியம் படைத்தோர் சொந்த வாழ்வின் சங்கடங்கள், வறுமை, நெருக்கடிகள், உபாதைகள் தாண்டி இலக்கியம் படைத்தனர். சிலர் உடைமைகளையும், நிலப்புலன்களையும் செய்துவந்த உத்தியோகத்தையும் விட்டுவிட்டு எழுத்து களத்துக்கு வந்தனர்'  என்றும் நூலாசிரியர் கூறுகிறார்.

'தீவிர இலக்கியம் படைத்த ஆளுமைகளை சி.சு.செல்லப்பா, கரிச்சான் குஞ்சு, புதுமைப்பித்தன், கு.ப.ரா.,  ந.பிச்சமூர்த்தி, க.நா.சு. உள்ளிட்ட  பதினேழு பேரின் கட்டுரைகள் முதல் தொகுதியாக உள்ளது.  

இரண்டாவது தொகுதியில் பி.எஸ்.ராமையா, திருலோக சீதாராம், சுந்தர ராமசாமி,  ஆர்.சண்முக சுந்தரம், வ.ரா., வ.வே.சு. ஐயர் உள்ளிட்ட 17 ஆளுமைகளின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவர்களில் சிலரிடம் பேசி பழகியுள்ளதாகவும் பலரை நூல் வழி அறிந்ததாகவும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். வருங்கால இளம் தலைமுறையினருக்கு இலக்கிய ஆளுமைகளை அறிய நல்லதொரு வழிகாட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.