ஆளப்பிறந்தவர் நீங்கள் - சோம. வள்ளியப்பன், பக்.264; ரூ.300, கிழக்கு பதிப்பகம், சென்னை- 14; ✆ 044-42009603.
நாம் இவரைத்தான் பின்பற்ற வேண்டும் என்று மக்கள் தங்கள் மனதில் யாரை ஏற்றுக் கொண்டு பின்பற்றுகிறார்களோ அவர்களே தலைவர்கள்.
தலைமைப் பொறுப்பைத் தக்க வைத்துக் கொள்ளவும், காப்பாற்றிக் கொள்ளவும், சொந்தத் தலைமைப் பண்புகள்தான் உதவும்.
தலைமை பற்றி நிறைய கேள்விகள் பலருக்கும் உண்டு. இவற்றுக்கெல்லாம் விடை சொல்கிறது இந்த நூல்.
தலைமைப் பண்பு என்பது தானே வருவதல்ல. வளர்த்துக் கொள்வது. எவ்வாறெல்லாம் நம்மை தலைமைப் பதவிக்கு தயார்படுத்திக் கொள்வது என்பது ஒரு கலை. சிந்தனை, செயலில், முடி
வெடுப்பதில், அணுகுமுறையில் வித்தியாசம் இருப்பது அவசியம். அத்துடன் ஆளுமை மேம்பாடு, மனதளவில் நம்மை நாமே உயரே தூக்கி உட்கார வைத்து அழகு பார்ப்பது அவசியம்.
தலைவன் என்றால்..., எதைச் செய்து முடிப்பதற்குத் தலைமை?, தலைமை தோற்பது ஏன்?, தலைவனாக இருப்பதில் உள்ள சிரமங்கள் என அடுத்தடுத்த அத்தியாயங்கள் மூலம் ஒரு சிறந்த தலைவனாக தேவையான வழிகாட்டுதல்களை வழங்குகிறார் நூலாசிரியர்.
தலைவன் என்பவன், மற்றவர்களின் எண்ணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களை அவன் எண்ணுகிற விதமாகவே செயல்பட வைக்கிறவன் என தலைவனுக்கான இலக்கணத்தை தெளிவாக வகுத்து அதற்கு ஆற்ற வேண்டிய கடமைகளும், மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளும் உதாரணங்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சவரனுக்கு ரூ. 800 உயர்ந்த தங்கம்: வெள்ளி?

சல்மான் கான் - நயன்தாரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னையில் அதிநவீன வழிகாட்டி பலகைகள்! வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்!!

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 14,508 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

