உயர... உயர... எண்ணங்களாலும் செயல்களாலும் - சோம. வள்ளியப்பன்; பக்.144, ரூ.175; கிழக்கு பதிப்பகம், சென்னை - 14; ✆ 044-4200-9603.
நம்மிடம் இல்லாததை பெரிதாக நினைத்து அதை நோக்கி ஓடிக்கொண்டே நம்மிடம் இருப்பதை மறந்து விடுகிறோம். இதுபோன்ற வாழ்வின் சிறு சிறு சந்தோஷங்களை தேடுதலில் தொலைக்காமல் அந்த நிமிஷமே அனுபவிப்பது குறித்து பல்வேறு உதாரணங்களுடன் விவரிக்கிறார் சோம.வள்ளியப்பன்.
பணம் மட்டுமே குறிக்கோள் என்றில்லாமல் மனம் விரும்புவதை முழு ஈடுபாட்டுடன் செய்யும் போது அவர்கள் பக்கம் பணம் கொட்டுகிறது. பணத்தை தேடி ஓடும்போது நமக்கான உறவுகளை மறந்து விடுகிறோம். அப்படி தனக்கு நெருக்கமான உறவுகளை தக்கவைக்க 5 வகையான அன்பின் மொழிகளை இதில் சிறப்பாக கூறியுள்ளார். தீபாவளி போன்ற பண்டிகை
களுக்கு மட்டும் குடும்பங்கள், நண்பர்களுடன் மகிழ்ச்சியை தேடும் நாம் - தினம் தினம் அதை அனுபவிப்பதை தவறிவிடுகிறோம். சொந்த வீடு வாங்கிய பிறகு, அதிகாரியான பிறகு என பலர் மகிழ்ச்சியை எதிர்காலத்தில் தேடுகின்றனர்.
சிலர் சுயநலம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு வாழ்வில் வேறு விழுமியங்களின்றி வாழ்வர். அவர்களின் உலகம் மிகச்சிறியது. அதில் அவர்கள் மட்டுமே இருப்பார்கள். பாரதி, வள்ளலார் போன்றோர் தன்னைத் தாண்டி உலகின் ஒவ்வொரு உயிரின் நலனையும் மையமாகக் கொண்டு யோசிப்பவர்களாக திகழ்வர். இதுபோன்று வாழ்வில் பொருளாதாரத்தில் மட்டுமின்றி உறவு, மனநிம்மதி, ஆளுமை என அனைத்திலும் புதிய உயரங்களை அடைந்து ஒரு பறவையைப் போல சிறகுகள் விரித்து உயர, உயர பறக்க விரும்புபவர்களுக்கான புத்தகம் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!

புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி தொடர்!

ஐபிஎல் 2026ல் சிறந்த எகானமி: முதலிடத்தில் சிஎஸ்கே வீரர் அகீல் ஹொசைன்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

