கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

DIN

கோதை கொண்டாடும் கோவிந்தன் - வசந்தி பெருமாள்; பக்.162; ரூ.200; சந்தியா பதிப்பகம், சென்னை- 83; ✆ 044-24896979.

பன்னிரு ஆழ்வார்கள் வரிசையில் இடம் பெற்ற ஒரே பெண்மணி 'கோதை நாச்சியார்' என்று போற்றப்படும் ஆண்டாள். வேதங்கள் காட்டும் நெறியான வைணவம் போற்றும் பெருமாளின் பர சொரூபம் (மேலான வடிவம்), வியூக சொரூபம் (வெளிப்பட்ட வடிவம்), விபவ சொரூபம் (தோன்றி வந்த வடிவம்), அந்தர்யாமி சொரூபம் (உள்ளுறை வடிவம்), அர்ச்சாவதார சொரூபம் (வழிபடற்குரிய வடிவம்) ஆகிய ஐந்து நிலைகள் குறித்தும் ஆண்டாள் திருப்பாவையிலும் நாச்சியார் திருமொழியிலும் செந்தமிழில் சுவைபட சொல்கிறாள் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர்.

திருமாலின் 'தோன்றி வந்த வடிவங்களான' கிருஷ்ணாவதாரம், ராமாவதாரத்தை பக்த கவிகள் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆண்டாளும் அதற்கு விதிவிலக்கல்ல.

தசாவதாரங்களில் 6 அவதாரங்களை நேரடி யாகவும் ஓர் அவதாரத்தை மறைமுகமாகவும் குறிப்பிட்டுள்ளார் ஆண்டாள். நாச்சியார் திருமொழியில் கிருஷ்ணாவதாரத்தை குறிக்கும் இடங்களை சுவைபட தொகுத்துள்ளார் நூலாசிரியர்.

திருமாலின் திருக்குணங்களை வர்ணித்து கோதை நாச்சியார் பாடிய இடங்களில் எடுத்துக்காட்டுகள் மிகச் சிறப்பு. அதுபோலவே 'நாச்சியார் பார்வையில் திருமாலின் வடிவழகு' பகுதியில் அடுக்கப்படும் எடுத்துக்காட்டுகள் அருமை. வைணவ பக்தி சங்கல்பம், தமிழ் நயம், ஆண்டாளின் கவிநயம் ஒருங்கே வெளிப்படும் இடங்கள் இவை.

திருமாலின் திருவடிகளை பற்றுதற்கான வழியாக உள்ளவற்றை ஆண்டாள் தம் பாடல்களில் எவ்வாறு உணர்த்தி உள்ளார் என்பதை இந்த நூலில் ஆய்ந்தளித்துள்ளார் நூலாசிரியர். இறைவனை எளிதில் அணுகி அவன் அருளை பெறுவதற்கான வழிவகைகளை ஆண்டாள் ஆக்கிக் கொடுத்திருப்பதை இந்த நூல் தெளிவுபடுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.