கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

ம. சிங்காரவேலரின் அறிவியல் சிந்தனைகள்

News image
Updated On :8 ஏப்ரல் 2024, 12:37 pm

DIN

ம. சிங்காரவேலரின் அறிவியல் சிந்தனைகள் - த. ஸ்டாலின் குணசேகரன்; பக். 80; ரூ. 80; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை - 50; ✆ 044 - 26251968.

தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்றறியப்படும் ம.சிங்காரவேலரைப் பற்றி சென்னைப் பல்கலை.யில் நூலாசிரியர் நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவின் எழுத்து வடிவமே இந்த நூல். காந்தியடிகளைவிட ஒன்பது வயது மூத்தவர், பெரியார் ஈ.வெ.ரா.வைவிட பத்தொன்பது வயது மூத்தவர் சிங்காரவேலர் என்று குறிப்பிட்டுத் தொடங்கும் ஆசிரியர்,

ஒருவரைப் பற்றிய மதிப்பீட்டில் இவற்றை அறிந்திருப்பதும் அவசியம் என மிகச் சரியாகவே குறிப்பிடுகிறார்.

1902-இல் லண்டனில் நடந்த புத்த மத மாநாட்டில் பங்கேற்றதுதான், சுயசிந்தனையாளரான சிங்காரவேலரின் அறிவுத் தேடலுக்குப் புத்தொளி பாய்ச்சியதாகக் குறிப்பிடும் ஆசிரியர், அவருடைய நூலகத்திலிருந்த இருபதாயிரம் நூல்களைப் பற்றி அமீர் ஹைதர்கானின் மேற்கோளுடன் தெரிவிக்கிறார்.

அறிவியலில் ஆழமும் அவற்றைப் பரப்புவதில் இருந்த ஆர்வமும் பற்றிக் குறிப்பிட்டு, அதனால், சிந்தனைச் சிற்பி என அண்ணா குறிப்பிட்டதே பின்னாளில் பட்டத்தைப் போலாகிவிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்காரவேலரின் அறிவியல் எழுத்துகளையும் நூல்களையும் பட்டியலிட்டு, நூலகத்திலிருந்த நூல்களிலும் அவருடைய கட்டுரைகளின் எண்ணிக்கையிலும் பாதிக்கும் மேற்பட்டவை அறிவியல் சார்ந்தவையே என்கிறார். சூரியன்தான் பிரபஞ்சத்தின் நடுநாயகம் என்ற உண்மையைப் பரப்ப அறிவியலாளர் புரூனோ பட்ட பாட்டைப் பதிவு செய்ததுடன், அறிவியலை

எழுதியெழுதி, அறிவியல் உணர்வை, உண்மைகளைத் தமிழ்ச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்துவதில் சிங்காரவேலரின் பங்களிப்பைச் சிறப்பிக்கிறது நூல். அறிவியல் பரவினால் மூட நம்பிக்கைகள் ஒழியும் என்ற அவருடைய அறிவியல் முகத்தை அறிமுகப்படுத்தும் நல்ல நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.