எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

அரங்க வெளியில் பெண்கள்

நவீன தமிழ் அரங்கத்தின் வரலாறு இன்னமும் முழுமையாகப் பதிவு செய்யப்படாத நிலையில், அத்துறையின் பெண் மையப் பதிவுகள் குறித்து அலசி ஆராய்ந்துள்ளார் நூலாசிரியர்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2024, 10:41 am

DIN

அரங்க வெளியில் பெண்கள் - இளம்பிறை; பக்.218; ரூ.280; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை-83; ✆93637 83850.

நாகப்பட்டினம் மாவட்டம் சாட்டியக்குடியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்ற பெயரை இயற்பெயராகக் கொண்ட நூலாசிரியர், சென்னையில் ஓர் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர். கிராமிய கவிதை மொழியுடன் நவீன கவிதை மொழியும் கூடிய இவரது படைப்புகள் பல்வேறு பல்கலைக்கழங்களின் பாடத் திட்டங்களில் இடம்பெற்றிருக்க, இவரும் பள்ளிப் பாடத் திட்டங்கள் உருவாக்கப் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.

நவீன தமிழ் அரங்கத்தின் வரலாறு இன்னமும் முழுமையாகப் பதிவு செய்யப்படாத நிலையில், அத்துறையின் பெண் மையப் பதிவுகள் குறித்து அலசி ஆராய்ந்துள்ளார் நூலாசிரியர்.

டி.பி.ராஜலட்சுமி, கே.பி.சுந்தரம்பாள் எனத் தொடங்கி, ருக்மிணிதேவி, அனிதா ரத்னம் உள்ளிட்ட நாட்டியக் கலைஞர்கள் வரை அவர்களது குறிப்புகளை அளித்துள்ளார்.

நவீன தமிழ் நாடகத்தில் பெண் பாத்திரங்கள், நாடகம் உருவாக்கம்- பெண் பாத்திரங்கள், நாடக இயக்கத்தில் பெண்கள் மற்றும் அவர்கள் வெளிப்படுத்தும் சமூக அவலங்கள், நவீன கதை உலகில் ரோகிணி, கலைராணி உள்ளிட்ட நடிப்புக் கலைஞர்களது குறிப்புகள் என சேகரித்துள்ளார்.

பின்னிணைப்பாக, நாடகவியலாளர்கள் அ.மங்கை, ரோகிணி, ஜெயராவ் ஆகியோருடனான சந்திப்பில், நாடகங்கள் குறித்த பல்வேறு தகவல்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.

சடங்கு சம்பிரதாய நம்பிக்கைகள், சமய பேதங்கள், மொழி பேதங்கள் மிகுந்த நாட்டில் அதன் இறுக்கமான பிடியில் இருந்து விடுபட்டு பெண்கள் சாதனையாளர்களாக மிளிர நடைபெறும் போராட்டங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.