சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மூங்கில் மூச்சு

சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும் நூல் இது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2024, 6:56 pm IST

மூங்கில் மூச்சு - சுகா; பக். 216; ரூ.250; சுவாசம் பதிப்பகம், சென்னை-187; ✆81480 66645.

ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. நூலாசிரியர் தான் பிறந்து வளர்ந்த திருநெல்வேலியிலும், திரைத் துறைப் பணிக்காக வந்த சென்னையிலும் கிடைத்த அனுபவங்களை சுவாரசியமான நடையில் எழுதியுள்ளார்.

பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணியில் தொடங்கி, 33 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. திருநெல்வேலிக்காரர்களுக்கு தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமன்று; குடும்பத்தில் ஓர் உறுப்பினர் என தாமிரபரணியைப் போற்றி தொடங்கும் முதல் கட்டுரையே நூலை ஒரே மூச்சில் படித்து முடிக்கத் தூண்டும் உத்வேகத்தை அளிக்கிறது.

வாத்தியார் என்று நூலாசிரியரால் அழைக்கப்படும் இயக்குநர் பாலுமகேந்திராவின் மாணவர்களை அறிமுகப்படுத்தும் 'வாத்தியாரும் மாணவர்களும்' கட்டுரை சினிமா ஆர்வலர்களுக்கு பல ஆச்சரியங்களைத் தரும்.

இலங்கை வானொலியில் நிகழ்ச்சிகள், வானொலி அறிவிப்பாளர்கள் குறித்த கட்டுரை இளம்தலைமுறையினருக்கு புதியதாக இருக்கும்; முந்தைய தலைமுறையினருக்கு பழைய சினிமா நினைவுகளை அசைபோட வைக்கும்.

திருநெல்வேலியில் தன் சக மனிதர்களை கட்டுரைகளில் உலாவவிட்டு இத்தனை காலம் கடந்தும் அவர்களை நினைவில் வைத்திருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது.

நெல்லைத் தமிழின் மணம் நூல் முழுக்க பரவிக் கிடக்கிறது. நூலாசிரியரின் நண்பன் குஞ்சு போல ஒவ்வொருவருக்கும் இருந்த பால்ய நட்பை நினைவுபடுத்துகின்றன கட்டுரைகள். சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும் நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.