எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

காட்ஃபாதர் எம்.ஜி.ஆர்.

வியக்க வைக்கும் தகவல்கள், அழகான வண்ணப் படங்களுடன் முழுமையாக எழுதப்பட்டிருப்பதும், சர்வதேசத் தரத்தில் பிரசுரித்திருப்பதும் சிறப்பு.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2024, 10:55 am

DIN

காட்ஃபாதர் எம்.ஜி.ஆர்., நாஞ்சில் எம்.வின்சென்ட்; பக்.376; ரூ.550; விகடன் பிரசுரம், சென்னை- 2; 80560 46940.

பாமர மக்கள் சிறப்புற வாழ வேண்டும் என்பதை தனது நடிப்பு வாயிலாக மட்டும் வெளிப்படுத்தாமல் விடாமல் நிஜத்திலும் செய்து காட்டியவர் எம்.ஜி.ஆர். இன்றும் அவர் தமிழர்

களின் நெஞ்சங்களில் காட்ஃபாதராகத் திகழ்கிறார் என்கிறார் நூலாசிரியர். அவரது விசுவாசியான நூலாசிரியர், எம்.ஜி.ஆரின் உயர்ந்த சிந்தனைகளை இளம்தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில் நூலாக்கியிருக்கிறார்.

திமுகவில் எம்.ஜி.ஆரின். பங்களிப்பு, அக்கட்சியில் இருந்து வெளியேறியது, தமிழக அரசியலில் தலைசிறந்த தலைவராக உருவானது, சந்தித்த சவால்கள், கட்சியைத் தொடங்கி 5 ஆண்டுகளில் முதல்வரானது, தனது சாதனைகளை முத்திரைப் பதித்தது என 19 தலைப்புகளில் படிப்போர் வியக்கும் வகையில் ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆரின் ஆளுமை மிக்கச் செயல்பாடு அண்ணாவை மட்டுமல்லாது, கருணாநிதியையும் எந்த அளவுக்கு பாதித்தது என்பதை கருணாநிதியின் 2010- ஆம் ஆண்டு சட்டப்பேரவை பேச்சையே மேற்கோள் காட்டி விளக்கியிருப்பது சிறப்பாகும்.

அண்ணாவின் மருத்துவச் செலவை ஏற்ற எம்.ஜி.ஆர்., சுதந்திரப் போராட்டத் தியாகிகளைத் தேடிச்சென்று உதவியது, இலங்கைத் தமிழர் பிரச்னை, ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம், திமுகவின் சரிவு, கல்வியில் காமராஜரை பின்பற்றி எம்.ஜி.ஆர். செய்த சாதனைகள் என எண்ணற்ற தகவல்களை உள்ளடக்கிய வரலாற்றுத் தகவல் பொக்கிஷமாக உள்ளது. எம்.ஜி.ஆரின் ஆரம்பம் முதல் அமரரானது வரையிலான வியக்க வைக்கும் தகவல்கள், அழகான வண்ணப் படங்களுடன் முழுமையாக எழுதப்பட்டிருப்பதும், சர்வதேசத் தரத்தில் பிரசுரித்திருப்பதும் சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.