வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தேவானை - திருநிலை - ஒப்பிலாள் - உண்ணா - ஒமையா மற்றும் சில செட்டிநாட்டுப் பெண்கள்

ஒவ்வொரு கதையும் ஒருவிதம். அவசியம் படிக்க வேண்டிய கதைகள்.

News image
Updated On :2 டிசம்பர் 2024, 12:54 pm

DIN

தேவானை - திருநிலை - ஒப்பிலாள் -உண்ணா - ஒமையா மற்றும் சில செட்டிநாட்டுப் பெண்கள் - தேனம்மை லெக்ஷ்மணன்; பக். 116; ரூ. 150; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை - 600 004; ✆ 75500 98666.

செட்டிநாட்டுப் பெண்களின் பிரச்னைகளை ஆவணப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட 14 சிறுகதைகளின் தொகுப்பு. தமிழில் குறிப்பிட்ட சமுதாயம் அல்லது வட்டாரம் சார்ந்த எழுத்துகள்

எப்போதும் தனி கவனத்தைப் பெறுகின்றன. இந்த நூலிலும் தனிச்சிறப்பாக செட்டிநாட்டுப் பெண்களைப் பற்றி பேசப்படுகிறது.

செட்டிநாட்டில் காலங்காலமாகக் கேட்கப்பட்டு வருகிற சில குடும்பங்களின் கதைதான் ஒப்பிலாள். இங்கொரு குடும்பம், அங்கொரு குடும்பம், இரு நாடுகளிலும் குழந்தைகள். ஒரு காலத்தில் நிறைய ஒப்பிலாள்கள். நல்லவேளையாக இப்போது அருகிப்போய்விட்டது.

செட்டிநாட்டின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறது யுவைடிஸ் சிறுகதை. நிறைய பெரிய குடும்பங்கள் தொழில், வேலை காரணமாக ஊரைவிட்டு வெளியேறிவிட்ட நிலையில், சோமண்ணன் போலவே இப்போதும்கூட பலரைப் பார்க்க முடியும்.

முத்தாயி மிகச் சிறிய கதை. ஆனால், கண்கள் கலங்கிவிடும். இன்றைக்கும் பெண் குழந்தைகளுக்கே உள்ள சிறப்பை வெளிப்படுத்துகிறாள் ஆயி.

இவர்களைப் போன்ற பல கதை மாந்தர்களை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்; இந்தக் கதைகளின்வழி அன்றும் இன்றும் செட்டிநாட்டுப் பெண்களின் பிரச்னைகள் பேசப்படுகின்றன. பெண்களுடைய பிரச்னையை ஒரு பெண்ணாக மிகச் சிறப்பாகச் சிறுகதைகளாக்கியுள்ளார்.

செட்டிநாட்டு வாழ்வியலை ஆவணப்படுத்தியுள்ள இந்தச் சிறுகதைகளில் உரையாடல்களைப் புரிந்துகொள்வது சிலருக்குக் கடினமாக இருக்கலாம். ஆனால், அவை உயிர்ப்புள்ளவை என்பது கவனத்துக்குரியது. ஒவ்வொரு கதையும் ஒருவிதம். அவசியம் படிக்க வேண்டிய கதைகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.