வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நல்லியல்பு நிர்வாகம்

நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டியவற்றை இந்த ஒரே நூலில் அறிந்து கொள்ள முடிகிறது.

News image
Updated On :2 டிசம்பர் 2024, 12:59 pm

DIN

நல்லியல்பு நிர்வாகம் - கே.ஜெ.சூரியநாராயணன்; பக்.192; ரூ.200; பிரெய்ன் பேங்க், சென்னை-17; ✆ 98410 36446.

தொழிலதிபரான நல்லி குப்புசாமி செட்டியார் இலக்கிய ஆர்வம் மிக்கவர். கலை, இலக்கியம், ஆன்மிகம், தன்னம்பிக்கை, தொழில் மேலாண்மை, நிர்வாகம் போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த பல நூல்களை எழுதியிருக்கும் நல்லி குப்புசாமி செட்டியாரின் 10 நூல்களில் உள்ள கட்டுரைகளில், முக்கிய விஷயங்களைத் தொகுத்து இந்த நூலில் அளித்துள்ளார் நூலாசிரியர்.

நல்லி குப்புசாமி செட்டியாரின் நூல்கள் என்றாலே, எண்ணற்ற தகவல்களைக் கொண்ட பொது அறிவுக் களஞ்சியமாகவும், சான்றோர்களின் சிந்தனைகளைக் கொண்ட தன்னம்பிக்கை நூல்களாகவும் இருக்கும். அப்படியிருக்கும்போது சிறந்த நூல்களிலேயே, சிறந்தவற்றைத் தொகுத்து எழுதப்பட்டிருக்கும் இந்நூலின் சிறப்பைச் சொல்ல வேண்டுமா என்ன?

அகம், அச்சம், அடிமைத்தனம், அமைதி, அறம், அறிவு, அன்பு, அனுசரணை, ஆசிரியர், ஆத்திரம், ஆர்வம், ஆலோசனை, இயல்பு, இலக்கு, சோம்பல், பக்குவம், உதவி, ஊக்கம், தொழில், நட்பு, தரம், நம்பிக்கை, வாடிக்கையாளர்கள் என பல்வேறுபட்ட தலைப்புகளில் உள்ள கட்டுரைகளில் மனதுக்கும், உடலுக்கும் உற்சாகமூட்டும் ஆயிரக்கணக்கான தகவல்கள் தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன.

'இளம் நிர்வாகிகள் நிறுவனத்தில் சேர்ந்தவுடன் மூத்த நிர்வாகிகள் அரவணைத்துச் செல்ல வேண்டும்' என்பது போன்ற எண்ணற்ற மேலாண்மை சார்ந்த வழிகாட்டும் வரிகள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டியவற்றை இந்த ஒரே நூலில் அறிந்து கொள்ள முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.